அனிரூத் இசையில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த தமிழ் பாடல்கள்..! முழு லிஸ்ட் இதோ..!

தமிழ் சினிமாவில் தற்பொழுது நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத் இவரை தற்பொழுது இசை ஜாம்பவானாக பலரும் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில்  அனிருத் அவர்கள் இளையராஜா ஏ ஆர் ரகுமான் யுவான் போன்றவர்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் எந்த திரைப்படத்தில் தாளம் போட்டாலும் சரி அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுவது வழக்கமாகி போய்விட்டது.  அந்த வகையில் இவர் இசையமைக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி கண்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய இசையில் வெளியான பீஸ்ட் டான் விக்ரம் மூன்று திரைப்படங்களுமே அபார வெற்றியை சந்தித்துள்ளது. இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் இசையில் வெளியாகே பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல்களை பற்றி பார்க்கலாம்.

தனுஷ் திரைப்படத்தில் 3 என்ற திரைப்படத்தில் அனிருத் இசை அமைத்திருந்தார் இந்த திரைப்படத்தில் “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மிகவும் பிரமாண்டமாக மட்டுமில்லாமல் என்றும் பல இளைஞர்களின் காலர் டியூனாக இந்த பாடல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற “எதிர்நீச்சல் அடி”  பாடல் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி தனது ராப் மூலமாக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அதேபோல வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில்  இடம்பெற்ற “டைட்டில் ட்ராக்” ஆனது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் இடம் பெற்ற “செல்பி புள்ள” என்ற பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தில் “டானு டானு” என்ற பாடலுக்கு  அனிருத் இசையமைத்து இருந்தார் இந்த திரைப்படம் மட்டும் இன்று பாடலும் மாபெரும் வெற்றி. அதன் பிறகு அஜித்துடன் இணைந்து வேதாளம் என்ற திரைப்படத்தில் பணியாற்றியிருந்தார் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற “ஆலுமா டோலுமா” பாடலும் அனிருத் மூலமாக வெளிவந்த பாடல் ஆகும்.

இவ்வாறு பல வெற்றி கொடுத்த அனிருத் அவர்கள்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட என்ற திரைப்படத்தில் பணியாற்றி இருந்தார் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் என்ற பாடல் மாபெரும் வெற்றி பெற்றது.

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் குத்து பாடல் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது விக்ரம் திரைப்படத்திலும் மாபெரும் வெற்றியை சந்தித்துள்ளார் அனிருத்.

Leave a Comment

Exit mobile version