கேரள ஸ்டைலில் புடவை அணிந்து ஓனம் பண்டிகையை கொண்டாடிய சின்னத்திரை பிரபலங்கள்.! சிவானி முதல் தர்ஷா வரை கியூட் புகைப்படங்கள்.

Tamil TV actress onam celebration : கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மிகவும் கோலாகலமாக வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த பண்டிகையை கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலங்களும் மிகவும் சந்தோஷத்துடன் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் சின்ன திரையில் நடித்து வரும் சீரியல் நடிகைகள் மற்றும் சின்னத்திரையில் பணியாற்றி வரும் தொகுப்பாளினிகள் என பலரும் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்கள்.

ஓணம் பண்டிகை கொண்டாடி தங்களுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்கள் அவர்களை யார் யார் என்பதை இங்கே காணலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா தன்னுடைய வீட்டில் பூக்களால் கோலமிட்டு ஓனம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் அப்பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

rithika

அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன் அது மட்டும் இல்லாமல் சினிமாவில் விக்ரம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த சிவானி நாராயணன் ஓணம் பண்டிகையை கேரளா புடவை அணிந்து கொண்டாடியுள்ளார் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

shivani

மௌன ராகம் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ரவீனா இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலக்கிக் கொண்டிருந்தார் இவர் ஓணம் பண்டிகையை கேரளா புடவை அணிந்து கொண்டாடியுள்ளார்.

raveena

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா ஓனம் பண்டிகையை கேரள புடவை அணிந்து கொண்டாடியுள்ளார்.

kanika

மேலும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் குக் வித் கோமாளி என்ற காமெடி நிகழ்ச்சியிலும் பிரபலம் அடைந்தவர் மோனிஷா இவர் மாவீரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலம் அடைந்து வருகிறார் இவர் தற்பொழுது ஓனம் பண்டிகையை கேரளா உடை அணிந்து கொண்டாடியுள்ளார்.

monisha

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கோமாளியாகவும் அண்மையில் நடந்து முடிந்த நான்காவது சீசனில் குக்காகவும் களம் இறங்கி பைனல் வரை அசத்தியவர் சிவாங்கி இவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

shivangi

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே என பல சீரியல்களில் நடித்து வந்தவர் தர்ஷா குப்தா இவர் சூப்பர் சிங்கர் எட்டாவது சீசனில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார் இவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

dharsha gupta
Exit mobile version