ஹீரோயின் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்த பிரேம்ஜி.! வித்யாசமான போஸில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்.!

0

தமிழ் திரையுலகில் நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வலம் வருபவர் தான் பிரேம்ஜி இவர் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இவர் காமெடியனாக மட்டுமல்லாமல் நடிகர்,இசையமைப்பாளர் போன்ற பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் இவர் கண்டிப்பாக நடித்து விடுவார்.

இவர் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அவ்வாறு இவர் நடித்த மாங்கா  திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று நன்றாக ஓடியது.

இந்நிலையில் இவர் தற்பொழுதும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆம் இவர் தமிழ் ராக்கர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்தத் திரைப்படத்திற்காக இவரே நடித்து இவரே இசையமைப்பதாகவும் தகவல் வெளியானதை அடுத்து இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலானது.

இவர் நடித்த தமிழ் ராக்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பொழுது அதில் பிரேம்ஜி ரவுடி கெட்டப்பில் இருந்தார் அதாவது கையில் பாட்டில் சைக்கிள் செயின் போன்ற பொருள்களை வைத்திருந்தார் இதனை வைத்து பாத்த பலரும் பிரேம்ஜி இந்த திரைப்படத்தில் ரவுடியாக தான் நடித்து இருக்கிறார் என கூறினார்கள்.

premji7
premji7

ஆனால் தற்போதும் இந்த திரைப்படத்தில் இருந்து இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது ஆம் இதில் பிரேம்ஜி அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரேம்ஜி அந்த போஸ்டரில் ரவுடி இந்த போஸ்டரில் காதல் மன்னன் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.