தமிழில் மெகா ஸ்டார் திரைப்படத்துடன் ஒத்தைக்கு ஒத்தையாக மல்லுக்கட்ட போகும் கேஜிஎஃப் இரண்டாம் பாகம்.! இது எங்கே போய் முடியுமோ

0

கன்னட சினிமாவையே கிண்டலடித்து வந்தது ஒரு காலம், ஆனால் அந்தப் பெயரை அப்படியே தலைகீழாக மாற்றியவர் தான் யாஷ் கன்னட சினிமாவில் கே ஜி எஃப் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுத்து உலகம் முழுவதும் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்..

கேஜிஎப் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது இந்த கேஜிஎஃப் திரைப்படத்தை பிரசாந்த் நீள் தான் இயக்கியிருந்தார். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார்கள் இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் படப்பிடிப்பு தள்ளிப்போனது, அதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போனது.

மேலும் கேஜிஎப் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது இன்னும் 15 நாட்களுக்குள் கேஜிஎப் 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் எனவும் அதனை தொடர்ந்து ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

படத்தை வருகிற 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதேபோல் அதே தேதியில்தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படமும் வெளியாக இருக்கிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் யாஸ் இருவரும் மிகப் பெரிய நடிகர்கள் என்பதால் இந்தியா முழுவதும் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் என கூறப்படுகிறது. எந்த இரண்டு திரைப்படங்களும் இந்திய அளவில் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.