ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேகா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்துறையில் மிகவும் பிரபலம் அடைந்தார் மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய புன்னகை மன்னன், என் பொம்மகுட்டி அம்மாவுக்கு, கடலோர கவிதைகள் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
1986 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன் முதலாக கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து புன்னகை மன்னன் செண்பகமே செண்பகமே, கதாநாயகன் என் பொம்மகுட்டி அம்மாவுக்கு, மேகம்கருத்திருக்கு, காவலன் அவன் கோவலன்.என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் கடைசியாக இவர் உத்தமபுத்திரன், யாயா, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கனா காணும் காலங்கள் தொடரிலும் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பிக்பாஸ் நான்காவது சீசனிலும் கலந்து கொண்டவர்.
இவர் 1996 ஆம் ஆண்டு ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கிறார் இவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம ரேகாவின் மகளா இது நம்பவே முடியவில்லை இவ்வளவு அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்…