பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.? இதோ முக்கிய அறிவிப்பு..

கொரோனா  பிரச்சினையின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள துறைகள் முடங்கிக் கிடக்கின்றது அந்த வகையில் முக்கியமானவை கல்வி. தற்போது தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 12 ரிசல்ட் வந்துள்ளது இதனை துவக்கமாக வைத்து தற்பொழுது கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

அதை தொடர்ந்து சில மாதங்களாக பள்ளி எப்போது திறக்கப்படும் என்று மத்திய அரசு ஆலோசனை செய்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறக்க மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.

அந்த வகையில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மத்திய மனிதவள அமைச்சர்களுக்கு ஈமெயில் மூலமாக நாளைக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment