இந்த ஐபிஎல் -லில் சரியாக விளையாடாத தமிழக வீரரை.! பேசியே பொளந்து கட்டிய ஆகாஷ் சோப்ரா.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 14 வது சீசனில் வெற்றிகரமாக ஆரம்பத்தில் நடைபெற்று வந்தாலும் இடையில் சிலருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டதால் உடனடியாக பிசிசிஐ. ஐபிஎல் போட்டியை நிறுத்தி வைத்துள்ளது இதுவரை 29 போட்டிகளில் மட்டுமே நடைபெற்று உள்ளன. மீதி போட்டிகள் அப்படியே தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் இது தள்ளிவைக்கப்பட்டுள்ளது ஆனால் கொரோனா இரண்டாம் அலை குறைந்தால் உடனேயே bcci ஐபிஎல்  போட்டியை உடனே தொடங்கும் தான் இருக்கிறது அப்படியே தள்ளிப் போனாலும் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்த திட்டமிட்டு உள்ளது.

இது சாத்தியமா என்பது ஒரு கேள்விக் குறியாக இருக்கின்றன நிலையில் IPL -லில் சரியாக விளையாதாது எந்த டீம்,  எந்த பிளேயர், என்பதை கிரிக்கெட் விமர்சகர்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிக மோசமாக விளையாடி வருகிறது அதற்கு காரணம் அந்த அணியின் ஆல்ரவுண்டர் சரியில்லை அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் தமிழக வீரர் விஜய்சங்கர் சுத்தமாக மிடில் ஆர்டரில் சுத்தமாக விளையாடவில்லை அவரது பேட்டிங், பந்து வீச்சு மிக மோசமாக இருக்கிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சரியாக விளையாடாத விஜய் சங்கருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகளை கொடுத்து வருகிறது ஆனால் இவருக்கு பதிலாக அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் களாக இருக்கும் அபிஷேக் சர்மாவுக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

ஷங்கரை காட்டிலும் அவர் திறமையானவர் அவர் நிச்சயம் அதற்கு தகுதியானவர் எனவும் அவர் சொன்னார். மேலும் விஜய் சங்கர் ஒரு 3டி பிளேயர் என கிண்டல் அடித்தார் ஆகாஷ் சோப்ரா.