தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வலிமை குறித்து போட்ட பதிவு – இணைய தளத்தில் வேகம்.

valimai
valimai

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் அஜித் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் இப்போது கூட இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தை மிக சீரும் சிறப்புமாக ஹச். வினோத் எடுத்துக் கொடுத்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அதற்கு முன்பாக படக்குழு அப்டேட்களை ஒரு பக்கம் கொடுத்துக் கொண்டிருக்க மறுபக்கம் போஸ்ட் பிரமோஷன் வேலைகளை செய்து வருகிறது இந்த திரைப்படம் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தி, தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வலிமை படம் குறித்த சில அப்டேட்டுகள் ஒரு பக்கம் வெளிவர மறுபக்கம் இயக்குனர் வினோத் இந்த படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார் போதாத குறைக்கு ஸ்டண்ட் மாஸ்டர் சுப்புராயன், படத்தின் வில்லன் கார்த்திகேயா போன்றவர்களும்  படங்களில் நடித்த தனது அனுபவத்தைக் கூறி வருகின்றனர் இதனால் அஜீத் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இருப்பினும் இந்த படத்தின் டிரைலர் அல்லது டீசரை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டு வருகின்றனர் வெகு விரைவிலேயே வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் புதிதாக வலிமை சிமெண்ட் என்று அறிமுகப்படுத்தி உள்ளனர் இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது மேலும் முதலமைச்சர் இந்த சிமெண்ட் குறித்தும் கூறியுள்ளார் அதில் அவர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் உயர்தர புது ரக சிமெண்ட் வலிமை என அவர் குறிப்பிட்டு கூறி உள்ளார்.