தமிழ் நாட்டில் மட்டும் இவ்வளவு கோடி வசூலா.. மாஸ் காட்டும் அண்ணாத்த படம்.?

0
rajini
rajini

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 40 ஆண்டுகளாக நடித்து வரும் ரஜினி தற்போது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து மற்றும் சென்டிமென்ட் படம் அதிகம் இருந்ததால் மக்களைப் பெரிதும் கவர்ந்து இழுத்தது ஆனால் அவரது ரசிகர்களை கவரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது இந்த திரைப்படம் இருப்பினும் வசூல் வேட்டை மட்டும் குறைந்தபாடில்லை அடித்து நொறுக்கி வருகிறது.

தமிழை தாண்டி மற்ற இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ஆனால் வெளிநாட்டில் அண்ணாத்த திரைப்படம் சுமார் 600 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியது ஆனால் எதிர்பார்த்த வசூலை வெளிநாட்டில் கைபற்ற வில்லை என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அண்ணாத்த திரைப்படம் இதுவரை சுமார் 200 கோடியை தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் ஆனால் திரைப்படம் சுமார் 150 கோடியை தொட்டு அள்ளி உள்ளதாம். ரஜினியின் மார்க்கெட் சமீபகாலமாக குறைந்த வண்ணம் தான் இருக்கின்றன ரஜினியின் திரைப்படங்கள் 300 கோடி 400 கோடி அள்ளுவது வழக்கம் ஆனால் தற்போது அவரது சமீப கால திரைப்படங்களில் 200 கோடியை தொடவே தள்ளாடி வருகிறது.

ரஜினியின் சினிமா பயணம் இன்னும் ஓரிரு திரைப்படங்களில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஆனால் ரஜினி மட்டும் சொல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினி அடுத்ததாக இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.