ஆஸ்கார் வரை சென்ற தமிழ் திரைப்படங்கள்.! அட லிஸ்டில் இந்த படமும் இருக்கா.!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் பல விருதுகளை வென்றது. அதிலும் ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்களின் வரிசையில் பல திரைப்படங்கள் உள்ளன. ஆஸ்கார் விருது வாங்குவது என்றால் அது அசாத்தியமான ஒன்று ஆனால்  ஆஸ்கர் விருது வரைக்கும் சென்ற தமிழ் திரைப்படங்களைப் பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம்  தெய்வமகன் தான் இந்த திரைப்படம் தான் முதல் முதலில் ஆஸ்கர் விருது வரைக்கும் சென்ற திரைப்படம்.ஏ சி திருலோகச்சந்தர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் இரண்டாவதாக ஆஸ்கர் விருது வரைக்கும் சென்று திரைப்படம்.இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல ஹாசன் வேலு நாயக்கர் என்ற மும்பை வாழ் தாதாவாக நடித்திருப்பார்.

1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி திரைப்படம் ஆஸ்கருக்கு சென்ற மூன்றாவது திரைப்படம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படதில் மூளை வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையின் வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்கும்  திரைப்படம் தான் அஞ்சலி.

1992 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் ஆஸ்கருக்கு சென்ற நான்காவது திரைப்படமாகும்,கமலின் கதை திரைக்கதையில் வரதன் இயக்கிய இந்தப்படமும் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்.

deiva magan
deiva magan

1995ஆம் ஆண்டு மறுபடியும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குருதிப்புனல் திரைப்படம் ஐந்தாவதாக ஆஸ்கருக்கு சென்ற திரைப்படம் ஆகும் இதில் இரண்டு காவல் துறையினரை பற்றி எடுத்து அழகாக கூறும் இத்திரைப்படத்தை பிசி ஸ்ரீராம் இயக்கியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படமான இந்தியன் ஆஸ்கருக்கு சென்ற ஆறாவது திரைப்படமாகும். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஒரு சுதந்திர தியாகின்னுடைய ஆழமான தேசப்பற்றை மிக அழகாக சொல்லி இருந்தது.

1998 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் ஆஸ்கருக்கு சென்ற ஏழாவது திரைப்படமாகும்.எப்போதுமே கனமான கதயை கொண்ட திரைப்படம் தான் ஆஸ்கருக்கு அணுப்பி வைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்து, இந்தப் படம் ஒரு விதிவிலக்கு என்று கூட சொல்லலாம்.

jeans
jeans

2000 ஆம் ஆண்டு கமல் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ஹே ராம் என்ற திரைப்படம் ஆஸ்கருக்கு சென்ற எட்டாவது திரைப்படமாகும்.இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்ட பிரிவினை மற்றும் மதக்கலவரங்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்தது.

2016 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் ஆஸ்கருக்கு சென்ற ஒன்பதாவது திரைப்படமாக உள்ளது. த லாக் கப் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் எளியவர்களின் வாழ்க்கையும் அவர்களை தவறாக ஏற்படுத்தும் சில காவல்துறை அதிகாரிகளையும் சுட்டிக்காட்டிய திரைப்படமாக அமைந்தது.

visaranai
visaranai
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment