லியோவுக்கு பயந்து பதுங்கிய படங்கள்.. இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?

OTT Release Movie: தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. அப்படி கடந்த 19ஆம் தேதி அன்று விஜய்யின் லியோ திரைப்படம் வெளியானதனால் இந்த வாரம் ஓடிடியில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் ரிலீசாக உள்ளது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் பொழுது சிறிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் போட்டி போட தயங்கி வருகின்றனர். அப்படி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு விஜய்யின் லியோ திரைப்படம் வெளியானதால் அதன் பிறகு எந்தவொரு படமும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை.

எனவே இந்த வாரம் பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன்படி பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கிய மார்கழி திங்கள் படம் மட்டும் வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனை அடுத்து இந்த வாரம் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் சோனி லிவ் ஓடிடியில் வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி ரிலீசாக உள்ளது அதேபோல் யாரோ என்கின்ற படமும் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

பிறகு பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கங்கனா ரணாவத் கூட்டணியில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்ற சந்திரமுகி 2 படம் அக்டோபர் 26ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் படமும் இன்று நெட்பிலிக்ஸ்  ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களை தொடர்ந்து சரத்குமார் மற்றும் அமிதாஷ் நடித்திருக்கும் பரம்பொருள் படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது.