இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்..

OTT Movies: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. அதில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ போன்ற படங்களின் கொண்டாட்டத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியிலும் இந்த வாரம் வெளியாக உள்ளது.

அதாவது வாரம் தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகுவது போல் ஓடிடி-யிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் சித்தார்த்தின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற சித்தா ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது.

அப்பத்தாவின்புடவை பார்த்து கதறி அழும் ஜனனி.. குணசேகரின் கொட்டத்தை அடக்க பெண்கள் எடுக்கும் அதிரடி முடிவு…

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற இப்படம் சுமாரான வசூலையே பெற்றது. இதனை அடுத்து கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஜோதி என்ற படம் நாளை ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தை கிருஷ்ண பரமாத்மா இயக்க வெற்றி, சீலா குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் கடந்த வாரங்களாக தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அப்படி கோஸ்ட் என்ற கன்னட திரைப்படம் ஜீ5 ஓடிடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவராஜ் குமார், ஜெயராம், அனுபம்கெர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஸ்கூல் முடிச்சிட்டியா தம்பி அட்லீயை கலாய்த்து விட்ட அஜித்.! விழுந்து விழுந்து சிரித்த நயன்தாரா

இதனைத் தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்ற மலையாள படம் நாளை ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைமில் தீப்பொறி அன்னி என்ற மலையாள படம் வெளியாக உள்ளது.

Exit mobile version