தமிழகத்தில் வசூலில் மாஸ் காட்டிய 10 திரைப்படங்கள் எது தெரியுமா.? அஜித் விஜய் எந்த இடத்தில் இதோ லிஸ்ட்.!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு திரைப்படம் முதலிடத்தில் இருப்பதை நாம் பாக்ஸ் ஆபீசை வைத்து தான் கூற முடியும், அதேபோல் ஒரு நடிகரின் மார்க்கெட் உயர்கிறது என்றால் படத்தின் கலெக்ஷனை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது, அதேபோல் தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலில் நூறு கோடியைத் தாண்டி செல்கிறது.

என்னதான் அஜித், விஜய் திரைப்படங்கள் நூறு கோடியை தாண்டி சென்றாலும் இதற்கெல்லாம் விதை போட்டது என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான், அந்த வகையில் தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

பாகுபலி 2 திரைப்படம் தமிழகத்தில் 150 கோடி வரை வசூல் செய்தது அதேபோல் விஜயின் பிகில் திரைப்படம் 143 கோடியும், அஜித்தின் விசுவாசம் திரைப்படம் 128- 130 கோடியும். சர்கார் திரைப்படம் 126 கோடியும், மெர்சல் திரைப்படம் 125 கோடியும்,  பேட்ட திரைப்படம் 115 கோடியும், ரஜினியின் 2.0 திரைப்படம் 115 கோடியும், எந்திரன் திரைப்படம் 100 கோடியும் தர்பார் திரைப்படம் 90 கோடியும், வேதாளம் திரைப்படம் 76 கோடியும் வசூல் பெற்றுள்ளது.

இனி வரும் அஜித், விஜய் திரைப்படங்கள் இதற்கு முன் வெளியாகிய திரைப்படங்களின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment