தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் திரைப்படம் வெற்றி அடைகிறதோ இல்லையோ ஆனால் தமிழில் டப் செய்யப்பட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது அந்த வகையில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
அந்த வகையில் தெலுங்கு மொழியில் உருவாக்கிய பாகுபலி கன்னடத்தில் உருவாக்கிய கேஜிஎப் திரைப்படம் ஹிந்தியில் உருவாகிய தங்கள் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. இந்த வரிசையில் தமிழில் எந்த திரைப்படமும் இடம்பெறவில்லை என ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
அதேபோல் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்ட kgf பாகுபலி திரைப்படங்கள் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்தியுள்ளது இதுபோல் பிரம்மாண்டமான திரைப்படங்கள் தமிழில் எடுக்காதது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது ஆனால் இந்த படங்களின் சாதனையை 70 வருடங்களுக்கு முன்பே முறியடித்துள்ளது தமிழ் படம்.
இந்த திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பு எஸ் எஸ் வாசன் இயக்கத்தில் உருவாக்கியது. அதாவது 1948ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படம்தான் அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படத்தில் டி ஆர் ராஜகுமாரி எம் கே ராதா என் எஸ் கிருஷ்ணன் ரஞ்சன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படம் தந்தையின் ராஜ்யத்தை ஆள்வதற்காக இரண்டு சகோதரர்கள் போராடும் திரைப்படம் முதலில் தமிழிலும் பின்பு ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டது மேலும் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வாள் சண்டைக் காட்சிகள் என பலரும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
தற்பொழுது பாகுபலி திரைப்படத்தை கொண்டாடும் மக்கள் சந்திரலேகா திரைப்படத்தை பிரமாண்டமாக கொண்டாடினார்கள் பாகுபலி கே ஜி எஃப் திரைப்படத்துக்கு முன்பே தமிழில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படமாக அமைந்தது தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.