தமிழ் சினிமா வரலாற்றிலேயே 600 கோடிக்கு மேல் வசூல் செய்த இரண்டு தமிழ் திரைப்படம்.! ஷங்கர் ரெக்கார்டை முறியடிக்க முடியாமல் திணறும் நெல்சன்.

Tamil movie 600cr collection : கோலிவுட் சினிமாவில் சமீப காலமாக புதிய திரைப்படங்கள் அசால்டாக 100 கோடி வசூலை மிக எளிதாக எட்டி விடுகிறது. அதிலும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், அஜித் விஜய் சூர்யா சிம்பு சிவகார்த்திகேயன் ஆகியோர் திரைப்படங்கள் மிக எளிதாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே 600 கோடி வசூல் செய்த இரண்டு திரைப்படங்களை இங்கே காணலாம்.

ஷங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் 2.0 இந்த திரைப்படத்தில் ரஜினி எமி ஜாக்சன், அக்ஷய்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் ஏ ஆர் ரகுமான் இசையில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது, இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலில் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

2.0 திரைப்படம் வெளியாகி 800 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த வசூலை இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் முறியடிக்க முடியவில்லை. ரஜினி நடிப்பில் வெளியாகிய 2.0 திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், விநாயகன், மிருணா மேனன், சுனில், தமன்னா, என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாலமே நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் இன்னும் ஜெயிலர் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜெயிலர் திரைப்படம் 635 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது தமிழ் சினிமா வரலாற்றிலேயே 600 கோடி வசூலை கடந்த திரைப்படத்தில் ஜெயிலர் திரைப்படமும் இணைந்துள்ளது இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே 2 திரைப்படம் மட்டும் தான் 600 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் நெல்சன் சங்கரின் 2.0 திரைப்படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

jailer win rajini
jailer win rajini