கடந்த வருடத்தில் 100 கோடி வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ.!

1. விஸ்வாசம் – இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் அவர்கல் நடித்தார் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். விஸ்வாசம் திரைப்படம் ஆக்ஷன் மற்றும் தந்தை மகள் பாசத்தை வெளிபடுத்திய படமாக அமைந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் திரையுலகில் வெளியாகி சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது.

2. கைதி- இந்த திரைப்படம் மிகக் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அதிரடி திரைப்படம். கைதி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். அதுமட்டும்மல்லாமல் இந்த படம் ஹீரோயின் மற்றும் பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது இந்த படத்தில் ஹீரோவாக கார்த்திக் அவர்கள் நடித்துள்ளார்

3. அசுரன் – வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம். திரைப்படம் 150 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிலிம்பேர் அவார்டு கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பல அவார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

4. நேர்கொண்ட பார்வை – இந்த படத்தை போனிகபூர் மற்றும் அஜீத் கூட்டணியில் உருவான இப்படம் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும். இப்படம் மூன்று பெண்களுக்கு வரும் பிரச்சனையிலிருந்து எப்படி வெளி வருவார்கள் என்பது படத்தின் கதையாக அமைந்தது இந்த படம் ரசிகர்களுக்கு இடையே மற்றும் பெண்கள் மத்தியில் ஒரு சிறந்த படமாக அமைந்தது. இப்படம் சுமார் 189 கோடி வசூலை பெற்றது.

5. பேட்ட – ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி மற்றும் பல தமிழ் முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவான திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்தது இந்த படம் சுமார் 250 கோடி வசூலை பெற்று தந்தது.

6. பிகில் – அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் இப்படத்தில் விஜய் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது. பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி வசூலை பெற்று சாதனை புரிந்தது.

7. காப்பான் – இத்திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இப்படத்திற்கு பிரபல நடிகர் மோகன்லால், ஆர்யா, இவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இத்திரைப்படம் வெளியாகி பலரால் விமர்சிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக 100 கோடியை பெற்றிருந்தது.

Leave a Comment