சினிமாவில் ஹரியும் விக்ரமும் இல்லை என்றால் நான் இப்போ இல்லை.! பல நாள் உண்மையை தற்போது சொன்ன பிரபல நடிகை. அட இப்படி ஒரு விஷயம் நடந்ததா.!

0

பொதுவாக நடிகைகளை என்றால் குறிப்பிட்ட வருடம் வரை மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வர முடியும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற நடிகைகளை விடவும் கடந்த 15 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா.

த்ரிஷாவிற்கு வயதானாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இருக்கு மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை. அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் 96 திரைப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.  இந்நிலையில் த்ரிஷா ஒரு பேட்டியில் தனது சினிமா வாழ்வில் நடந்ததை பற்றி கூறியுள்ளார்.

அதாவது திரிஷா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த பிறகு சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று முடிவு செய்தாராம்.

அப்படிப்பட்ட நிலையில் ஹரி அவர் படத்தில் நடிக்க திரிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்தால் ஒப்புக் கொடுத்தாராம். பொதுவாக ஹரி பிரபலமான ஒரு நல்ல  இயக்குனர் என பல முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிப்பார்கள் என்பதை அறிந்து கொண்ட த்ரிஷா இவர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

அந்த வகையில் ஹரி விக்ரமை வைத்து எடுத்து திரைப்படம் சாமி. இத்திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இத்திரைப்படம் வெற்றியைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

இத்திரைப்படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது என்றும் இதன் காரணமாக தான் இன்றளவும் நான் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறேன் இல்லை என்றால் முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன் என்று கூறியுள்ளார் த்ரிஷா.