சகோதர-சகோதரி பாச உறவினை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 தமிழ் திரைப்படங்கள்..

Tamil Movies: இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடி வரும் நிலையில் இதனை ஒட்டி சகோதர-சகோதரி பாசத்தை மையமாக வைத்து உருவாகி ஹிட்டடித்த தமிழ் திரைப்படங்கள் 5 பார்க்கலாம்.

1.பாசமலர்: 1961ஆம் ஆண்டு வெளியான பாசமலர் படத்தில் சிவாஜி கணேசன் அண்ணனாகவும், சாவித்திரி தங்கையாகவும் நடித்திருப்பார். அதில் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்.. பாடல் பல அண்ணன்களின் மனதை கவர்ந்தது. இன்று வரையிலும் அண்ணன் தங்கைகளுக்காக பாடும் தாலாட்டு பாடலாக அழைக்கப்படுகிறது.

2. திருப்பாச்சி: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த முக்கியமான படம் தான் திருப்பாச்சி இதில் சிவகிரி என்ற கதாபாத்திரத்தில் விஜய் அண்ணனாக நடிக்க அவருக்கு தங்கையாக கருப்பாயி என்னும் கேரக்டரில் மல்லிகா நடித்திருப்பார். தங்கையின் சின்ன சின்ன ஆசைகளை கூட எப்படி அண்ணன் நிறைவேற்றுவார் என்பதை வைத்து உருவான இந்த படம் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடிக் ஹிட்டடித்தது.

3. சிவப்பு மஞ்சள் பச்சை: இந்த படத்தில் நடிகை ஜெலிமோன் ஜோஸ் ராஜலட்சுமி என்னும் கேரக்டரில் நடிக்க இவருக்கு தம்பியாக மதன் எனும் கேரக்டரில் ஜிவி பிரகாஷ் நடித்திருப்பார். அப்படி இப்படத்தில் இடம் பெற்று இருந்த ஆழி சூழ்ந்த உலகிலே இனி யாவும் அழகாசே.. என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதில் தம்பி-அக்கா இருவரும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.

4. கடைக்குட்டி சிங்கம்: கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு மொத்தம் 5 அக்காக்கள் இருப்பார்கள். தங்களுடைய தம்பியை அனைவரும் பாசமாக பார்த்துக் கொள்ள ஒரு கட்டத்தில் மொத்த குடும்பமும் பிரிந்து விடும் எனவே பிறகு கார்த்தி அனைத்தையும் சமாளித்து மீண்டும் ஒன்று சேர்ப்பார்.

5. நம்ம வீட்டு பிள்ளை: கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயன் அண்ணனாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடித்திருப்பார். இதில் எங்க அண்ணன் அன்ப அல்லி தெளிக்கிறதில் மன்னன்.. என்ற பாடல் பெரிதளவிலும் ரசிகர்களை கவர்ந்தது. இவ்வாறு இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.