சினிமா உலகம் புதிய நோக்கி ஓட ஓட இயக்குனர்களும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்தது அசத்துகின்றனர் அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலி இந்த காலத்திற்கு ஏற்ற படியான ஆக்சன், சென்டிமெண்ட் கலந்த படங்களை கொடுத்து வருகிறார்.
அதனால் திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் படங்களாக மாறுகின்றன. இதுவரை பல படங்கள் இயக்கி இருந்தாலும் எந்த படமும் இதுவரை தோல்வியை சந்தித்தது கிடையாது அந்த காரணத்தினால் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவராக ராஜமௌலி இருந்து வருகிறார்.
ராஜமௌலி பாகுபலி படத்திற்கு முன்பு பல வெற்றிப்படங்களை கொடுத்து இருந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. பாகுபலி திரைப்படம் தான் அவரை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்தது அதன்பின் அவரது சினிமா பயணமும் மிகப்பெரிய அளவில் விரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது திரைப்படத்தில் இப்போ நடிக்க பல நட்சத்திரங்களுக்கு காத்து கொண்டு நிற்கின்றனர். ஆனால் இவரோ ராம்சரண், ஜூனியர் என்டிஆர் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் RRR. இப்படம் வருகின்ற 25ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாகவே ஆடியோ ரைட்ஸ் மற்றும் டிஜிட்டல் உரிமம் போன்றவற்றை மிகப்பெரிய ஒரு தொகைக்கு விற்று உள்ளது.
RRR படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் இயக்குனர் ராஜமௌலி அப்படி பேட்டி ஒன்றில் நீங்கள் கடைசியாக பார்த்த தமிழ் படம் என கேட்டனர் அதற்கு எனது கவனத்தை ஈர்த்த தமிழ்ப்படங்களில் ஒன்று மாஸ்டர் படம் நல்லா இருந்தது அனிருத் இசை அந்த படத்திற்கு terrific என கூறியிருந்தார்.