24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் ரசிகர்களை குஷியாக்கிய ஆண்ட்ரியா.! இதோ தரமான சம்பவம்

andrea
andrea

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் பணியாற்றிவருகிறார், இவர் முதன் முதலில் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு மங்காத்தா, சகுனி இது நம்ம ஆளு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தரமணி திரைப்படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது, அதுமட்டுமில்லாமல் கமலுடன் விஸ்வரூபம் முதல் பாகத்திலும் இரண்டாவது பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய வட சென்னை திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனால் இவர் புகழின் உச்சத்திற்கே சென்றார், தற்பொழுது ஆண்ட்ரியா விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பதை தாண்டி கச்சேரிகளில் கவர்ச்சியான உடை அணிந்து பாட்டு பாடி நடனம் ஆடுவார். தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் மக்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள், வீட்டிலேயே இருக்கும் தனது ரசிகர்களை குஷி படுத்துவதற்காக அசத்தலான காரியம் ஒன்றை செய்துள்ளார், 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் தோன்றிய ஆண்ட்ரியா ரசிகர்களின் வேண்டுகோள்படி என்ன பாடல் கேட்கிறார்களோ அந்த பாடலை பாடி அசத்தி வருகிறார்.

andrea
andrea