பள்ளிச் சிறுமிகள் முதல் நடிகரின் மகள் வரை விட்டுவைக்காத காசியின் லேப்டாப்பில் இருப்பது என்ன.? 7 நண்பர்களிடம் போலீஸ் அதிரடி விசாரணை

kasi kanyakumari-tamil360newz
kasi kanyakumari-tamil360newz

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி, இவருக்கு வயது 26, கல்லூரி முடித்த இவர் தனது தந்தையுடன் இறைச்சிக் கடையில் வேலை பார்த்தார், இவருக்கு பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலம் தனது கட்டுடலை காட்டி பள்ளி சிறுமிகள் முதல் பிரபல நடிகரின் மகள் வரை காதலிப்பது போல் நடித்து தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்வார்.

பின்பு பல பெண்களின் அந்தரங்க வீடியோக்களையும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடன் பழகும் போது எடுத்து வைத்துக் கொள்வார், பின்பு அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி பல லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார், தற்பொழுது காசி போலீஸ் பிடியில் சிக்கிய பிறகு பெண்களுடன் அந்தரமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் காசியின் தனிப்பட்ட லேப்டாப்பை கைப்பற்றினார்கள் போலீசார், அந்த லேப்டாப் ஹார்ட் டிஸ்க் மற்றும் செல்போன்களில் தேடி வருகிறார்கள், அவரது செல்போனை போலவே கணினியில் பாஸ்வேர்ட் போடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

காசியின் லேப்டாப்பை முழுமையாக சோதனை செய்த பிறகே அதில் என்னென்ன பதுக்கி வைத்துள்ளார் காசி என்பது தெரியவரும், இந்தநிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த காசியின் 7 நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் போலீசார்.