நடிகர் விவேக் காலமானார் சினிமா நட்சத்திரங்கள் அதிர்ச்சி.!

நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அவருக்கு தற்போது வயது 59.

நடிகர் விவேக் சென்னையில் வசித்து வந்தார் இவர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணி அளவில் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரஅவசரமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1987 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதிலுறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் விவேக் பல நகைச்சுவை கைகளில் சமூக கருத்துகளையும் இணைத்து தொடர்ந்து பேசியவர்.

vivek
vivek

இப்படி அடிக்கடி சமூக கருத்துக்களை பேசுவதால் ‘சின்ன கலைவாணர்’ என பெயரையும் பெற்றார் மேலும் இவர் 2000 ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை 50க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இவர் மொத்தமாக கிட்டத்தட்ட 2020 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இப்படி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் இவருக்குப் பிடித்த தலைவர் என்றால் அப்துல் கலாம் அவர் மீது அதிக பற்று கொண்டவர் அதேபோல் இயற்கை வளங்கள் அழிந்து விடக்கூடாது என மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு கோடிக்கு மேல் மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணி புரிந்தவர்.

இன்று காற்றோடு காற்றாய் கலந்துவிட்டார் அவரின் உயிர். இந்த சம்பவம் சினிமா பிரபலங்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.

Leave a Comment