தமிழ் சினிமாவில் உண்மையான கணவன் மனைவி ஜோடியாக நடித்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

திரையுலகில் உண்மையாக திருமணம் செய்துகொண்ட பல நடிகர், நடிகைகள்  ஒன்றினைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எந்தெந்த நடிகர் நடிகைகள் எந்தெந்த படங்களில் ஒன்று இணைந்து நடித்துளளார்கள் என்பதை தற்போது காண்போம்.

பார்த்திபன் சீதா- பார்த்திபன் சீதா இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் 1989 புதியபாதை.

சூர்யா,ஜோதிகா – சூர்யா, ஜோதிகா இவர்கள் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் 1999இல் பூவெல்லாம் கேட்டுப்பார் இதனையடுத்து 2000 ஆண்டில் உயிரிலே கலந்தது, 2003ஆம் ஆண்டில் காக்க காக்க, 2006ம் ஆண்டில் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

கமல், கௌதமி- கமல், கௌதமி  இருவரும் முதலில் 1992இல் தேவர்மகன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக 1993இல் நம்மவர், 2015ஆம் ஆண்டில் பாபநாசம் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பாக்யராஜ், பூர்ணிமா ஜெயராம் – இவர்கள் முதலில் 1982-ல் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர். அதன்பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

அஜித்குமார், ஷாலினி – இவர்கள்  1999இல் அமர்க்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

சுரேஷ் மேனன், ரேவதி – இவர்கள் 1993இல் புதிய முகம் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இவர்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

சரத்குமார், ராதிகா – இவர்கள் 1994இல் நம்ம அண்ணாச்சி என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். இதனையடுத்து 1997இல் சூரியவம்சம் திரைப்படத்தில் நடித்திரந்தனர்.

ரஞ்சித், ப்ரியா ராமன் – இவர்கள்  1999இல் நேசம் புதுசு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இதன் பிறகு எந்த ஒரு படத்திலும் இவர்கள் ஒன்றாக நடிக்கவில்லை.

ராஜகுமாரன், தேவயானி – இவர்கள் 2013ஆம் ஆண்டில் திருமதி தமிழ் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள். அதன்பிறகு இவர்களும் வேறு எந்தப் படத்திலும் ஒன்றிணைந்து நடிக்கவில்லை.

ராம்கி, நிரோஷா – இவர்கள் ஆயிரத்து 1998ஆம் ஆண்டில் பறவைகள் பலவிதம் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்.

விஜயகுமார், மஞ்சுளா – இவர்கள் 1991இல் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் ஒன்றிணந்து நடித்துள்ளார்கள்.

கார்த்திக், ராகினி – கார்த்திக், ராகினி இவர்கள் 1979இல் சோலைக்குயில் திரைப்படத்தில் ஒன்று இணைந்து நடித்துள்ளார்கள்.

ஜெமினி கணேசன், சாவித்திரி – இவர்கள் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் ஆயிரம் ரூபாய் இத்திரைப்படம் 1964ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இதனையடுத்து 1961ஆம் ஆண்டில் பாசமலர் என்ற இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள்.

ரவிச்சந்திரன், ஷீலா – இவர்கள் 1965ஆம் ஆண்டில் இதய கமலம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள்.

எஸ்எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி – இவர்கள் 1965ஆம் ஆண்டில் காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்திருந்தார்கள்.

ஏவி.எம் ராஜன், புஷ்பலதா- இவர்கள் 1967இல் கற்பூரம் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள்.

எம்ஜிஆர், ஜானகி – இவர்கள் 1948இல் மோகினி திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள்.

Leave a Comment