வடசென்னை வச்சு செய்யும் தமிழ் சினிமா..! உச்சகட்ட கோபத்தில் மக்கள்..!

தமிழ் சினிமா பெருமளவு வளர்ச்சியடைவதற்கு சென்னை ஒரு முக்கிய காரணம் அந்த வகையில் சென்னையில் இருக்கும் பலருக்கும் தமிழ் சினிமா மீது அதிக அளவு ஆர்வம் உண்டு மேலும் சென்னையில் வட சென்னை என்ற பகுதியானது அதிக அளவு மக்கள் தொகை கொண்ட பகுதியாகும் அதுமட்டுமில்லாமல் எப்பொழுதும் அங்கு கூட்டம்  நெரிசல் அதிகமாக காணப்படும் என்பது தெரிந்த விஷயம் தான்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு கலாச்சாரம் அதிக அளவு வளர்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள மிகப்பெரிய பகுதியான வடசென்னை ஏரியாவில் அதிக அளவு தப்பு நடப்பது போல  பல்வேறு படங்கள் உருவாகி வருகிறது.

ஆனால் இது போன்ற படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதன் காரணமாக இயக்குனர்களும் இதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள் பா ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியவர்கள் எடுக்கும் திரைப்படங்கள் முழுக்க முழுக்க வடசென்னை சார்ந்ததாகவே இருந்துள்ளது.

அந்த வகையில் வட சென்னை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் தனுஷின் வடசென்னை, சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், நடிப்பில் வெளியான மெட்ராஸ்,  மற்றும் புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்கள் ஆகும் ஆனால் இந்த திரைப்படங்களில் முழுக்க முழுக்க வட சென்னையில் நடக்கும் தப்புகளை குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் கூட வடசென்னை வைத்து எடுக்கப்பட்ட பயப்படமாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் சிவகார்த்திகேயன் அவர்கள் ரவுடி கெட்டப்பில் மாஸ் கட்டுவது மட்டுமில்லாமல் வடசென்னை பின்னணியில் தெரிகிறது.  அந்த வகையில் பல குற்றங்களும் இந்த ஒரே ஏரியாவில் நடைபெறுவது போல சித்தரித்த திரைப்படம் இயக்குவது மக்களுக்கு பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தி வருவதாக வடசென்னை மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் வடசென்னை பகுதியில் எவ்வளவு நல்ல விஷயங்கள் நடைபெற்று வருகிறது அவை எல்லாம் திரைப்படங்களாக காட்டலாமே என பலரும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment