“இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தமிழ் சினிமா பிரபலங்கள்” அட இவங்களுக்கும் ட்வின்ஸ் தானா.!!

0

குழந்தைச் செல்வம் என்றாலே நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அழகான வரம் என்றே சொல்ல வேண்டும். அதைப்போன்ற ஒரு குழந்தையை பெற்றெடுப்பதும் ஒரு சிறந்த வரமே ஆகும். அதிலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு மாபெரும் வரம் என்றே சொல்ல வேண்டும். நமது தமிழ் சினிமா துறையில் உள்ள ஒரு சில பிரபலங்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

1. அதில் முதலாக “ராமராஜன்” இவர் 90’s இல் பிரபலமான நடிகர் ஆவார். இவருக்கு 1987 ஆம் ஆண்டு நடிகர் நளினியுடன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை- அருணா, ஆண் குழந்தை- அருண் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

2. இரண்டாவதாக காமெடி நடிகர் “அர்ஜுனன் “. இவர் “காதலில் சொதப்புவது எப்படி “என்ற தமிழ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் “காயத்ரி “என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை -இளன், பெண்குழந்தை -இயல் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

3. மூன்றாவதாக நடிகர் “பரத்”இவர் “பாய்ஸ் “என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் “ஜெஸ்லி “என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஆண் குழந்தை -அகத்தியன், ஆண் குழந்தை- ஜேடன் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

4. நான்காவதாக “பிரஜித்” இவர் சன்மியூசிக் மூலமாக அறிமுகமாகி “காதலிக்க நேரமில்லை” என்ற சீரியல் நடித்துள்ளார். மேலும் இவர் தலையணை பூக்கள் என்ற சீரியலில் நடித்த சேன்ட்றாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ருத்ரா,மித்ரா என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

5. ஐந்தாவதாக “சிங்கப்பூர் தீபக்” இவர் “கலக்கப்போவது யாரு” என்ற விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானார். இவர் “சுகன்யா” என்ற பெண்ணை 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுபிக் மித்ரா, தியா சந்திரமதி என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

6. ஆறாவதாக” சந்தோஷி” இவர் தமிழ் சினிமாவில் “வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் இளவரசி என்ற சீரியலில் நடித்த “ஸ்ரீதரை” திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ருஷிதா,சக்ஸிதா என்ற இரு பெண் இரட்டை குழந்தைகள் பிறந்தன.