தமிழ் நாட்டில் பிறந்து சினிமாவில் பட்டையை கிளப்பும் நடிகைகள்.! இதோ லிஸ்ட்

பொதுவாக தமிழ் சினிமாவில் கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு, ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் நடிகைகளை மிகவும் பிடிக்கும் அந்த வகையில் தமிழ் நாட்டில் பிறந்து நடிகைகளாக கலக்கும் நடிகைகளின் லிஸ்ட் இதோ.

1.சாய் பல்லவி – நடிகை சாய் பல்லவி கோத்தகிரியில் பிறந்தவர், தனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பின்பு மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் பிரபலமான பின்னரே தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.

2. பிரியா பவானி ஷங்கர் – திருச்சியில் பிறந்த இவர் செய்தி தொகுப்பாளராக இருந்து பின்னர் நாடக தொடரில் நடித்து பிரபலமானவர். இதன் பின்பு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

3. சமந்தா – இவர் தமிழகத்தில் சென்னையில் பல்லாவரத்தில் பிறந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின்னர் தமிழ் திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் நீ தானே பொன் வசந்தம், கத்தி, போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழில் பிரபலமாகியுள்ளார்.

4. கீர்த்தி சுரேஷ் – சென்னையில் பிறந்த கீர்த்தி சுரேஷ் தமிழில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.

5. ஐஸ்வர்யா ராஜேஷ் – திருப்பூரில் பிறந்து துணை கதாபாத்திரத்தில் பல வேடங்களில் நடித்து திரைப்படங்களில் அறிமுகமாகி  கனா, வடச்சென்னை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தமிழில் பிரபலமானார்.

6. த்ரிஷா கிருஷ்ணன் – சென்னையில் பிறந்த இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். பின்பு சிறிது காலமாக சினிமா துறையில் இருந்து விலகிய இவர் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

7. பிரியா ஆனந்த் – தமிழகத்தில் சென்னையில் பிறந்து பிற மாநிலங்களில் வளர்ந்தவர் சிறு பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர்.

8. ரெஜினா கேஸ்சன்றா – சென்னையில் பிறந்த இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தமிழில் பிரபலமான இவர் நெஞ்சம் மறப்பதில்லை,சரவணன் இருக்கப் பயமேன்,சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற திரைபடங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். 9. மேகா ஆகாஷ் காரை பட்டியில் பிறந்தார் அதேபோல் 10.நிவேதா பெத்துராஜ் நம்ம தூத்துக்குடியில் பிறந்தவர், போன்ற நடிகைகள் தமிழ் திரைதுறையில் பூர்விகமாக உள்ளனர்.

Leave a Comment