தமிழ் சினிமாவையே திருப்பிப் போட்டா திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்!!

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் சுமார் 200 படங்கள் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் எல்லா படமும் ஹிட் அடிப்பதில்லை ஏன் என்றால் தமிழில் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மற்றும் வித்தியாசமான கதை களம் இருக்கும் படங்கள் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறான. அப்படியான படங்கள் லிஸ்ட் இதோ.

1. 2014 இல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் எந்த ஒரு முன்னணி நடிகரும் நடிக்காத நிலையில் இப்படம் போட்ட பட்ஜெட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் கதைக்களம் சற்று வித்தியாசமாக இருந்ததால் தோல்வியடையும் என எதிர்பார்த்திருந்தார் ஆனால் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியது.

அது மட்டுமல்லாமல் இப்படம் பல விருதுகளையும் பெற்றது. படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த வில்லன் என்ற பட்டத்தை பெற்றார் மற்றும் பல விருதுகளும் வழங்கப்பட்டது. இவர் இதன் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஒரு உண்மையான ரவுடியின் கதையை படமாக எடுத்திருந்தனர்.

2. தமிழ் சினிமாவில் திரில்லர் மூவிக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. மாதவன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக பேசப்பட்ட படம் யாவரும் நலம் . இப்படத்தை விக்ரம் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை மனோகரன் என்ற பெயரில் மாதவன் அவர்கள் நடித்திருந்தார். அவர்கள் 13வது மாடியில் 13-வது என்ற என்கொண்ட புதிய வீட்டில் இவரது குடும்பம் குடியேறினார்கள்.

அவரது வாழ்க்கையில் சற்று பெரிய கனவு ஒன்று இவரது குடும்பத்தினர் நாடகம் ஒன்றை டிவியில் பார்த்து வருகின்றனர் நாடகத்தின் பெயர் யாவரும் நலம். தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி என்ன நடக்கிறதோ அதேபோன்று இவர்களும் அது போன்ற பிரச்சனைகள் நடக்கும் இதனை உணர்ந்த மாதவன் இதன் பின்னணி என்ன என்பதை கவனிக்க தொடங்குகிறார். ஒருநாள் வழியில் ஒரு டைரி ஓன்று  மாதவன் கண்ணில் தென்படுகிறது அதற்கு அந்த டைரியில் அதற்கான விடையை உள்ளதை கவனித்த மாதவன் என்ன செய்யப்போகிறார் என்பது இப்படத்தின் வெற்றியாகும்.

பிற்பாதியில் திகிலூட்டும் சம்பவங்களைக் கொண்டு படம் நகரும்.படத்தில் விறுவிறுப்பு கொஞ்சம் அரிதாக படத்தின் முழுவதும் நீங்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு உங்களை அதிர வைக்கும். தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு படம் என்று சொல்லலாம்.

3. 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆரண்ய காண்டம் எந்த ஒரு முன்னணி நடிகரும் இல்லாமல் போட்ட கலெக்ஷனை தாண்டி அதிகமாக எடுத்தது. படத்தில் கதைகளம் சிறப்பாக இருந்ததால் இது மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இவ்வுலகில் நாம் சாதாரணமாக மனிதர்கள் ஒரு சில விஷயங்களை செய்ய தயங்குவார்கள் அவர்களை நாம் சப்பை என்று கூப்பிடுவோம். அவர்களுக்கும் தனித்திறமை உண்டு என்பதனை இப்படம் அழகாக எடுத்து வைத்துள்ளது. இப்படத்தில் பாடல்கள் இல்லாமல் இருந்தாலும் யுவன் சங்கர் ரஜா பேக்ரவுண்ட் இசை சிறப்பாக இருந்தது. இதுவே இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. சிறந்த படத் தொகுப்புகான தேசிய விருதும் இப்படம் தட்டிச் சென்றது.

4.அருண் விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் தடம் இதற்கு முன்பு ஒரு சில வெற்றிகளை கொடுத்து இருந்த நிலையில் அவர் நடித்து வெளிவந்த தடம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்ததோடு இல்லாமல் அவரது பெயரை உச்சியில் தூக்கி நிற்க வைத்தது. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.மகிழ்திருமேனி அவர்கள் இயக்கியிருந்தார் இவர் ஏற்கனவே அருண்விஜய் நடித்து தடையற தாக்க என்ற படத்தையும் இவர் எடுத்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய் அண்ணன் தம்பி என்ற இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் பலம் என்னவென்றால் என்னதான் அடிச்சுகிட்டு உருண்டாலும் பிரச்சனைன்னு வந்துட்டா ஒன்று சேர்ந்துபாங்க என்பதே முக்கிய பங்கு என கூறிவந்தனர்கள்.

5. 2018ம் ஆண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்களில் ராட்சசன் படமும் ஒன்று. விஷ்ணு இசை வெளியீட்டு விழாவில் இப்படம் தோல்வி அடைந்தால் அடுத்த படமும் இவர்களுக்கு நடிப்பேன் என கூறியிருந்தார் ஏனென்றால் இப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படம் என்பதை அவரே நம்பியிருந்தார் இது தியேட்டரில் வெளியாகும் போது மக்களும் இதனை ரொம்ப எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து வந்தனர்.அதேபோல இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது அதுமட்டுமில்லாமல் இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருந்தது. சைக்கோ ஒருவன் தன்னை கேலி செய்த பெண்களை கடத்தி கொலைசெய்து வருகிறார். அவனைக் கண்டுபிடித்து கொல்வதே படத்தின் சிறப்பம்சம். படம் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் இருக்கும். விஷ்ணுவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

6. 2015 ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் பாபநாசம் இதனை தியேட்டரில் குடும்பங்களோடு வந்து பலர் பார்த்து சென்றனர். ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை கமல் அவர்கள் இதனை எப்படி எடுத்துச் செல்கிறார் என்பதே படத்தின் மீதி கதை ஆகும். போலீசாரிடம் இருந்து எப்படி தனது குடும்பத்தை மீட்கிறார் என்பதே படத்தின் மீதி கதை ஆகும். தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது.

7.துருவங்கள் பதினாறு திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது இதனை புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் இயக்கியிருந்தார். ஒரு கதைக்கு பல கோணங்களில் பல முகங்கள் உண்டு ஒரு கதையில் மற்றவர்களுக்கு வில்லனாக தெரியும் ஒருவனே அவன் பார்வையில் நல்லவனாக காணப்படுவான். என்ற சொல்லை அழகாக பெரியார் திரைக்கதையில் இயக்க உள்ளார் இயக்குனர். இந்த படத்தையும் மேலோட்டமாக பார்த்தால் புரிந்து சற்று கஷ்டமாக இருக்கும் ஆனால் இதனை உற்று கவனித்தால் இந்த படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

8.அசோக் செல்வன் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் தெகிடி இப்படத்தில் இவர் புலன்விசாரணை பணியாற்றுவது போல இவர் நடித்துள்ளார். தனியார் விசாரணை குழுவில் பணியாற்றுகிறார்.சில மர்மமான கொலைகளை கண்டு பிடித்து.அதன் பின்னணி என்ன என்பதை விளக்குவதே மீதி கதை. இந்தப் படம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன் சிறந்த நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இதுப்போன்று பல படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தினை கொண்டுள்ளன இரவுக்கு ஆயிரம் கண்கள், உரியடி, இமைக்கா நொடிகள் மற்றும் பிசாசு போன்றவையாகும்.

Leave a Comment