கோடிகளில் புரளும் கோலிவுட் நடிகைகள்.. நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் குந்தவை.! மார்க்கெட் இல்லை என்றாலும் சம்பளத்தில் கரார் காட்டுன் லேடி சூப்பர் ஸ்டார்

Tamil Actress Salary: தமிழ் சினிமாவில் 2023ஆம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோக்கள் அளவிற்கு நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நடிகைகள் பல வழிகளில் சம்பாதித்து வருகின்றனர்.  கோலிவுட்டில் பல ஆண்டுகளாக தனிக்காட்டு ராணியாக இருக்கும் நயன்தாராவிற்கு குந்தவையான திரிஷா தற்பொழுது டஃப் கொடுத்து வருகிறார்.

கோலிவுட்டில் ரசிகர்களால் அதிக விரும்பப்படும் நடிகைகள் தான் திரிஷா மற்றும் நயன்தாரா சமீப காலங்களாக நாயகிகளுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி 2023ஆம் ஆண்டு நயன்தாரா தான் அதிக சம்பளம் பெற்று கெத்து காமித்து வருகிறார்.

பிரச்சனை மறந்து ஒரு படி கீழே இறங்கி வந்த மகா.. நேரம் பார்த்து சீன் போடும் சூர்யா, ராஜலட்சுமி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

குறுகிய காலத்திலேயே பிரபலமான நயன்தாரா ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடைசியாக பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளது. ஆனால் தமிழில் அன்னபூரணி படம் வெளியாகி படும் தோல்வியினை சந்தித்தது ஒரு படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்த த்ரிஷா ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். 3வது இடத்தை பிடித்திருக்கும் சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது இவர் ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் காலமானார்..

4வது இடத்தில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா டோலிவுட், பாலிவுட்டில் அதிக சம்பளம் பெற்றாலும் தமிழில் குறைவான சம்பளம் வாங்குகிறாராம். அதன்படி 4 கோடி ரூபாய் சம்பளத்துடன் 4வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து சமந்தா ரூ.3 கோடி சம்பளத்துடன் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ்வர் படத்திற்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் பிரியங்கா மோகன் 1.25 கோடி சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை அடுத்து தமன்னா ஒரு கொடியும், ப்ரியா பவானி சங்கர் 60 லட்சமும், தளபதி 68 நாயகி மீனாட்சி சவுத்ரி 50 லட்சமும் சம்பளமாக வாங்குகிறாராம்.