பிரபல முன்னணி நடிகைகள் எடுத்த புதிய அவதாரம்.! பணத்திற்காக என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் வருத்தத்தில் ரசிகர்கள்.!

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என்றும் நாள்தோறும் திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பது என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்தோம் ஆனால் தற்பொழுது தலைகீழாக நிலைமை மாறி உயிரோடு இருப்போமா இருக்க மாட்டோமா என்ற நினைவுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறோம்.

இப்படிப்பட்ட நிலையில் முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் வெளியானால் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம் ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஏராளமான திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியாகி வருகிறது. இடையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர், கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான்,தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் ஆகிய திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ்சானது.

ஆனால் இத்திரைப்படங்களுக்கு  பிறகு மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது உள்ள பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடி வழியாக தொடர்ந்து ரிலீஸ்சாகி வருகிறது. அந்த வகையில் திரைப்படங்கள் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறதோ அதே அளவிற்கு வெப் சீரியலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

அதோடு தொடர்ந்து பல முன்னணி நடிகைகளும் வெப் சீரியலில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் இதில் பல நடிகைகள் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒரு கோடி, இரண்டு கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வெப் சீரியல் மூலம் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

உதாரணமாக  சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்து பல பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும்  சந்தித்து வந்தாலும் வெற்றிகரமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வெப் சீரியல் தி பேமிலி மேன் 2. இதற்கு சமந்தா சம்பளமாக 4 கோடியை வாங்கி உள்ளார் இந்த வெப் சீரியலை தொடர்ந்து மற்றொருவர் வெப் சீரியலிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதற்கு 8 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

எனவே தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளும் வெப் சீரியலில் நடித்தால் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன்,அனுஷ்கா, போன்றவர்களும் வெப் சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Comment