இதுவரை எந்த ஒரு நடிகையும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்ய இருக்கும் ஹன்சிகா.! இருந்தாலும் இதுக்கு தில்லு வேணும்ல

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என்ற அந்தஸ்துடன் கலக்கி வருபவர் நடிகை ஹன்சிகா. இவரின் கொழுக்கு மொழுக்கான உடலினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவரின் உடல் எடையைப் பார்த்து அனைவரும் இவரை குட்டி குஷ்பு என்று அழைத்து வந்தார்கள்.

இவர் தனுஷ், விஜய், சிம்பு என இன்னும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல்  தெலுங்கு,மலையாளம், கன்னடம் என தென்னிந்திய  அனைத்து மொழிகளிலும் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் தமிழில் மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்கள்.

மகா திரைப்படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஹன்சிகா தெலுங்கு வெப்சீரிஸ்  ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  இந்நிலையில் ஹன்சிகா கொழுக்கு மொழுக்கு என்று அழகாக இருந்த இவர் தற்போது தனது உடல் எடையை மிகவும் குறைத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

ஹன்சிகாவிடம் ஏன் உடல் எடையை குறைத்தீர்கள்  என்று கேட்டதற்கு படம் ஒன்றிற்காக குறைத்தேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஹன்சிகா 105 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனை அறிந்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். இருந்தாலும் ஹன்சிகாவின் ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு தங்களது ஆதரவுகளை தந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment