தமிழ் படங்களுக்காக தேசிய விருது பெற்ற நடிகைகளின் பட்டியல்.!

இந்திய அரசினால் சினிமாத்துறையினர் கௌரவப்படுத்த உருவாக்கப்பட்டது தான் தேசிய விருது வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்பட பிரபலங்கள் இதுவரை சுமார் 6 பேர் மட்டுமே இவ்விருதினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் தேசிய விருது பெற்று புகழ் பெற்றுள்ள தமிழ் நடிகைகள் சிலர் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. சரண்யா பொன்வண்ணன் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானவர். 1980இல் சில படங்களில் நடித்த சரண்யா. அதன் பிறகு எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.

குறிப்பாக அவர் நடிகனின் அம்மாவாக பல படங்களில் அவர் நடித்துள்ளார். ராம் (2005), எம்டன் மகன் (2006), களவாணி (2010), தவமாய் தவமிருந்து (2005) போன்ற படங்களில் அவரது நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பிலிம் விருதுகள் வழங்கப்பட்டன. 2010 அவர் நடித்து வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

2. பிரியாமணி 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் 2006 ம் ஆண்டு வெளிவந்த படம். பருத்திவீரன் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஏனென்றால் இப்படத்தின் மூலம் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. படத்தில் இவரது அழுத்தமான கதாபாத்திரம் இருந்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது என ஊடகங்கள் தெரிவித்தன மற்றும் இவரது நடிப்பையும் பலர் பாராட்டினர். இதனையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் சினிமா துறையில்  அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை.

3. கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தவர் சுகாசினி அவர்கள். இவர் தமிழ் திரைஉலகில் சிறுவயதிலிருந்து காணப்பட்டு வந்தாலும் அவர் நிலைத்து நிற்க திருப்புமுனை அவருக்கு உதவியாக  மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்கள் பல அவற்றுள் ஓன்று பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை, சிந்து பைரவி போன்ற படங்களாகும். அதுமட்டுமில்லாமல் மேலும் இவர் இந்திரா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் சிந்துபைரவி திரைப்படத்தில் நடித்ததற்காக 1986 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

4. அர்ச்சனா அவர்கள் வீடு படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது இவர் தமிழ்சினிமாவில் இச்சத்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

5. லட்சுமி அவர்கள் தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஜீவனாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லட்சுமி. 1977 ஆம் ஆண்டு வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இவர் சுமார் 400 படங்களுக்கு மேலாக நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. சோபா அவர்கள் தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் 17 வயதில் பசி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். சோபா அவர்கள் தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்துகொண்டார் இவரது உண்மையான பெயர் மகாலட்சுமி ஆகும். சோபா அவர்கள் சிறு வயதிலேயே தேசிய சிறந்த நடிகர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது வேறு எந்த நடிகையும் வாங்காத பட்சத்தில் இவர் வழங்கியது சிறப்பு வாய்ந்த பார்க்கப்படுகிறது.

Leave a Comment