நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை டேட்டிங் செய்து வந்தார் பின்னர் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் அதைப்பற்றி ஸ்டேட்டஸ் தட்டினார், அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் கர்ப்பமானார் மே மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த தகவல் வெளியாகின.
இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பொழுது கூட யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார், இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் இவர் வீட்டிலேயே இருந்து கொண்டு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
