தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
tamil-cinema-actors
tamil-cinema-actors

தமிழ் சினிமாவில் தற்போது பெரிய ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வந்து முன்னணி நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவல் தான், படத்தின் பட்ஜெட்டில் பாதி அளவு நடிகர்களின் சம்பளம் போவதாக மிகப் பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது, இதனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை வரைமுறை செய்யவேண்டுமென பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமாவில்.

அந்த வகையில் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் சம்பள விபரங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – 70 கோடி, தளபதி – விஜய் 50 கோடி, ‘தல’ அஜித் – 45 கோடி, உலக நாயகன் கமல்ஹாசன் – 35 கோடி, சூர்யா – 25 கோடி, சீயான் விக்ரம் – 18 கோடி,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – 9 கோடி, தனுஷ் 9 கோடி, சிம்பு 9 கோடி, சிவகார்த்திகேயன் 5 கோடி.

இந்த சம்பள விவரம் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை ஆனால் முன்னணி நடிகர்களையே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிதான் அதற்கு அடுத்த இடத்தில் விஜய் இருக்கிறார், அதேபோல் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் இவர் நாலு கோடி ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறார்.

ஒரு படத்தின் பட்ஜெட் பெரும்பகுதியை நடிகர்களின் சம்பளமாக செலவிடுவதால் தயாரிப்பாளர்கள் அதிகளவில் நஷ்டத்தை சந்திப்பதாக சொல்கிறார்கள், வணிக ரீதியாக திரைப்படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனையில்லை ஆனால் அப்படம் தோல்வியை சந்தித்தால் பெரும் நஷ்டத்தை அடைகிறார்கள்.

தமிழ் சினிமாவில் 90% படங்கள் அனைத்தும் தோல்வியை சந்திக்கின்றன, இதில் குறிப்பிட்ட திரைப்படங்கள் குறைவான பட்ஜெட்டில் எடுத்தால் போட்ட பணத்தை எடுத்து விடுகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட்டில் எடுக்கும் திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன இந்த நிலையில் நடிகர்களின் சம்பளத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த போவதாக கூறியுள்ளார்.