நடிகையை டார்ச்சர் செய்த ரகவாலாரன்ஸ் தம்பி.! போலீசில் பரபரப்பு புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராகவா லாரன்ஸ். ரகவா லாரன்ஸ் அவர்கள் முதலில் டான்ஸராக இருந்து படிப்படியாக திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனைத் தொடர்ந்து அவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

ராகவா லாரன்ஸ் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதையை எடுத்து அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டு வருபவர் அது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மற்றும் பொது மக்களையும் கவர்ந்து வருகிறார். ராகவா லாரன்ஸ் இயல்பாகவே உதவி செய்யும் தன்மை கொண்டவர் இவர் பல ஆண்டுகளாக ஊனமுற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனியாக டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் படங்கள் தமிழ், தெலுங்கு என இரு சினிமாவிலும் பிரபலம் அடைந்தவை. ராகவா லாரன்ஸ் அவர்கள் தெலுங்கில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தன இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் தம்பி காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்து வருவதாக தெலுங்கு துணை நடிகை ஒருவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனைப் போன்று பல தடவை டார்ச்சர் செய்து உள்ளதால் மேலும் டார்ச்சர் தாங்க முடியாததால் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் என்கின்ற வினோத். இவர் ராகவா லாரன்ஸின் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு துணை நடிகை உடன் நட்பு ஏற்பட்டுள்ளது அந்த நட்பை காதலாக மாற்ற சொல்லி டார்ச்சர் செய்து வருவதாக அவர் கூறினார். அதனாலதான் நான் போலீஸாரிடம் புகார் கொடுத்தேன் என்றும் கூறினார்.

elvin
elvin

எல்வின் அவர்கள் தனது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை ஜெயிலில் அடைத்தார் என கூறி மேலும் பரபரப்பை கிளப்பினார் என்னை ஜெயிலில் கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார். இந்த நிலையில் துணை நடிகை அவர்கள் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிந்து தெலுங்கானா முதல் அமைச்சர் தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என துணை நடிகையை மேலும் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment