மீண்டும் ஒரு வாரிசு நடிகர் ஹீரோவாகிறார்.! அதுவும் இந்த வில்லன் நடிகர் பையனா.!

0
nazar-paiyan
nazar-paiyan

actor nazar son kadaramkondan abihaasan next movie viral:பிரபல தயாரிப்பாளரான ஐ சிவி குமார், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் அட்டகத்தி, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பல திறமையுள்ள புதுமுக இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர்.

அந்த வகையில் இவர் தற்போது பிரபல முன்னணி நடிகரான நாசரின் மகனை தனது திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார்.

நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமலஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் என்ற திரை படத்தில் அவரது மகள் அக்ஷராஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் அவர் தனது கதாபாத்திரத்தில் சரியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து அபிஹாசன் ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை கேபிள் சங்கர் என்பவர் இயக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிக்கயிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய  அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.