ஆன்ட்டியை நம்பி வாழ்க்கையில் பூண்டியான பிரபல நடிகர்.! பல வருடம் கழித்து உண்மையை கசிய விட்ட பிரபலம்…

0
actor
actor

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பத்திரிகையாளராகவும் வலம் வருபவர் நடிகர் பயில்வான் இவர் 42 வயது ஆன்ட்டியை  நம்பி பிரபல நடிகரான கரன் நடுத்தெருவுக்கு வந்ததாக கூறி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் இது ரசிகர்களுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் கரன் இவர் முதன் முதலில்  1972 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அச்சமும் பாப்பையும் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கரன். இவரின் உண்மையான பெயர் ரகு இந்தப் பெயரின் மூலம் மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் சுவாமி ஐயப்பா பிரயாணம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றார்.

30-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் குழந்தை நச்சத்திரமாக நடித்துள்ள கரன் தமிழில் முதன்முதலாக எங்கள் பாட்டன் சொத்து என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கரண் ஹீரோவாக முதன் முதலாக மலையாள திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் தீச்சட்டி கோவிந்தன் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய நம்மவர் திரைப்படத்தில் கமலுக்கு மாணவனாக நடித்திருந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் வைகறை பூக்கள், கோயமுத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, சந்திரலேகா, ஆகிய திரைப்படங்களில் வில்லத்தனமாக நடித்து குணச்சித்திரவேடத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் இவர் ஹீரோவாக ராஜகாளியம்மன், பண்ணாரி அம்மன், ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் தம்பி வெட்டோத்தி சுந்தரம், கொக்கி, கருப்புசாமி குத்தகைக்காரர், ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார் இந்த திரைப்படங்கள் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது.

அதன் பிறகு ஏழு வருடமாக சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார் இப்படி ஒரு நிலைமைக்கு வந்ததற்கு காரணம் 42 வயது ஆண்டி தான் என பயில்வான்   ரங்கநாதன் புட்டு புட்டு வைத்துள்ளார். கரண் 42 வயது ஆன்ட்டியை தனக்கு மேனேஜராக நியமித்தார். அதன் பிறகு ஆண்டியின் கைப்பிடியில் கரன் மாறினார் தன்னுடைய சினிமா கேரியரில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பதை மொத்தமாக ஆன்ட்டி தான் முடிவு செய்தார்.

அதன் விளைவாக தன்னுடைய மொத்த சினிமா கேரியரையும் கரன் தொலைத்து விட்டார் தற்பொழுது பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார் கரன் எனக்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.