சினிமா உலகில் ஒரு நடிகர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க கொடுக்க தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தற்போது கோடி கணக்கில் சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக் குறியாகவே அமைகின்றன.
தயாரிப்பாளர்களுக்கு ஆறுதலாக சில பேட்டிகளில் உண்மையான நிலவரத்தை கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.அண்மையில் பேட்டி ஒன்றில் காதல் சுகுமார் நடித்துள்ள தொடாதே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசி உளளார் அதில் அவர் சொன்னது உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றிபெறும் படங்கள்தான் பெரிய படம் பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வி அடையும் படங்கள் சிறிய படம்தான்.
பல கோடிகள் செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள் நூறு கோடி ரூபாய் மேல் செலவு செய்து எடுத்த படம் 30 கோடி தான் வசூலிக்கிறது ஆனால் ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய்க்கு உயர்த்தி விடுகிறார்கள் இப்பொழுதுகூட 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர் 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் 100 கோடிக்கு மேல் இருந்ததால் வாங்க இல்லனா வராதீங்க என்கிறார்களாம்.
நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு பேசவில்லை பீஸ்ட் படம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள் அந்த படத்தை பற்றி எனக்கு என்ன கவலை இதை சொல்வதற்கு நான் பயப்படவில்லை காரணம் நான் விஜய்க்கிட பணம் கேட்டு நிற்கப்போவதில்லை தயாரிப்பாளரை வாழ வைக்க வேண்டும் அதற்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் என கூறினார் இவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா பேசியது :
எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்திருந்தால் அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்கவேண்டும் இங்கு நமக்கு கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைக்கவில்லை. நடிகர்கள் சம்பளம் அதிகமாக வாங்குவது தவறு என சொல்லவில்லை ஆனால் ஒரு பட தயாரிப்பில் உங்களுடைய பங்கு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாவை விட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறதாக பேசினார்.