பெண்களின் கனவு மன்னனின் தற்பொழுதுய நிலைமை என்ன தெரியுமா.?

பெண்களின் கனவு மன்னனாக இருந்தவர் நடிகர் அப்பாஸ். தற்பொழுது அவர் என்ன பண்ணுகிறார் என்பது யாருக்கும் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. 1996 களில் பிரபலமானவர் நடிகர் அப்பாஸ் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

2001 ஆம் ஆண்டு அமிரா என்ற பேஷன் டிசைனர் ஐ திருமணம் முடித்தார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமானது மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வந்த அப்பாஸ். தற்பொழுது சினிமா துறையை விட்டு விலகி இருக்கிறார்.

பல ஆண்டுகள் நடிக்காத நிலையில் திருட்டுப்பயலே படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டே வெளியேறினார் இதைத்தொடர்ந்து அவர் விளம்பரங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில விளம்பரங்கள் மட்டுமே கிடைத்தன.

இப்பொழுது அவர் சுய தொழிலை தொடங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி அவர் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என சினிமா மற்றும் அவரது குறுகிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment