இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உடல் எடையை குறைத்த லாஸ்லியா.! புகைப்படத்தை பார்த்த பிரமிக்கும் முன்னணி நடிகைகள்

0

நடிகை லாஸ்லியா  இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் இவர்பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்மூலம் மீடியாவின் பார்வை லாஸ்லியா மீது விழுந்தது இதனைத்தொடர்ந்து லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அந்த நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இவருக்கு பட வாய்ப்பு மற்றும் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அஸ்வின் அவர்களுடன் லாஸ்லியா இணைந்து சோப்பு விளம்பரங்களில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து லாஸ்லியா ஹர்பஜன்சிங் அவர்களுடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். என்னதான் லாஸ்லியா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில் லாஸ்லியா  பிக் பாஸ் தர்ஷன் அவர்களுடன் இணைந்து கூகுள் குட் டப்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது எப்பொழுதும் ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அந்த திரைப்படத்தின் ஹீரோயின் சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் பல புகைப்படங்களை வெளியிடுவார்கள் அதன் மூலம் இவர்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகரிக்கும் அதனால் இவரின் அடுத்த திரைப்படம் என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பார்கள்.

அந்த வகையில் நடிகை லாஸ்லியா அவர்களும்  இதே உத்தியை கடைபிடித்து வருகிறார் சமூக வலைத்தளத்தில் புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அந்தப் புகைப்படத்தில் லாஸ்லியா  அவர்கள் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கிறார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.