பேண்ட் சட்டையில் ஆளே மாறி போயிருக்கும் தாமரைச்செல்வி – பிக்பாஸ் பிரபலத்துடன் போட்ட குத்தாட்டம்.!

0
thamarai-selvi-
thamarai-selvi-

தமிழில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது இதில் ஐந்தாவது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடைசியாக ராஜூ ஜெயமோகன் லிட்டிலை வின் செய்தார். அவரைத் தொடர்ந்து 2வது இடத்தை பிரியங்கா பிடித்திருந்தார்.

இந்த ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் தாமரைச்செல்வி இவர் மேடை நாடகக் கலைஞர் ஆவார். இளம் வயதிலேயே வீட்டின் வறுமை காரணமாக நாடகத்துறையில் சேர்ந்தவர் பின்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தனது தாய் வீடு மற்றும் புகுந்த வீடு என இரண்டு வீட்டு கஷ்டங்களையும் சுமந்து வருகின்ற நிலையில் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும்.

இதில் கலந்துகொண்டு மக்கள் எதிர்பாராத அளவு சிறப்பாக விளையாடி நீண்ட நாட்கள் பயணித்தார்.  மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய தெரிந்து கொண்ட தாமரை செல்வி பின்பு அடுத்து ஒளிபரப்பாகிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் என யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிறப்பாக தனது யுக்தியை பயன்படுத்தி விளையாடி ஃபனல்ஸ் வரை சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது தனது கணவர் பார்த்தசாரதி உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியுலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது தனது திறமையை நடனத்திலும் காண்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எப்போதும் அடக்க ஒடுக்கமாக புடவையில் இருக்கும் தாமரைச்செல்வி தற்போது டீ சர்ட் பேண்ட் அணிந்து கொண்டு ஐக்கி பெர்ரியுடன் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை ஐக்கி பெர்ரி அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றனர்.இதோ அந்த வீடியோ.