திடீரென கார்த்திக்காக உருக்கமான பதிவு போட்ட தமன்னா.! இம்புட்டு பாசத்தை வச்சுக்கிட்டு வெளியே சொல்ல இருப்பதற்கு இதுதான் காரணமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிகர் சிவகுமார் அவர்களின் இளைய மகன் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, என தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

குறிப்பாக இவரை சினிமாவில் மிகவும் பிரபலமாக்கியது பையா திரைப்படம் தான் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா அவர்கள் நடித்துள்ளார். இவர்கள் இருவரையும் இந்த படத்தில் பார்த்த நெட்டிசன்கள் இருவருடைய ஜோடி பொருத்தம் மிகவும் அருமையாக இருந்ததால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பல முறை கிசுகிசுக்க பட்டது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலிப்பதாக நடிகர் சிவகுமார் அவர்களிடம் சென்றது ஆனால் சிவகுமார் அவர்கள் கார்த்தியை கண்டித்ததால் காதலை கைவிட்டு விட்டார் என்றும் கூறப்பட்டது இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தியின் சினிமாவிற்கு வந்த கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை பலரும் பலவிதமாக பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை தமன்னா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக்கு ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் இந்த பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழ் தெலுங்கு இரண்டிலும் பிஸியாக இருந்து வரும் நடிகை தமன்னா அவர்கள் கார்த்திகாக தமன்னா போட்ட பதிவு என்னவென்றால் 16 வருடம் கடந்த கார்த்திக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பேசாமல் தமன்னா கார்த்தியவே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தமன்னாவின் இந்த உறக்கமான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த பதிவு…

Leave a Comment