முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த தமன்னா! இதோ காரணம்.

0

Tamanna refuses to act with leading actor: நடிகை தமன்னா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.தற்போது இவர் ஹிந்தியில் போலே சுடியன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இந்நிலையில் இதனை தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜா உடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமன்னாவோ அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்க தமன்னா மூன்றுகோடி சம்பளம் கேட்டதாகவும் அதைக் கொடுக்க மறுத்ததால் இவர் அந்த படத்தில் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதற்கு முன் தமன்னாவும் ரவி தேஜாவும் இணைந்து 2015இல் பெங்கால் டைகர் என்ற படத்தில் நடித்திருந்தனர். படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து தற்போது இந்த ஜோடி இணையும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

தற்போது தமன்னா கன்னட சினிமாவில் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இவர் கேஜிஎப் திரைப்படத்தில் நடிகர் யாஷ்  உடன் இணைந்து  ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். இவர் நடிகர் யாஷ்  உடன் இணைந்து அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக  சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.