அந்த விஷயத்தில் சமந்தாவை பீட் பண்ணிய தமன்னா.! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய வீடியோ

tamanna
tamanna

தென்னிந்திய சினிமா உலகில்  முன்னணி நடிகையாக  பார்க்கபடுவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியே வந்த “யசோதா படம்” பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து நடிகை சமந்தா சகுந்தலம், குஷி மற்றும் பெயரிடப்படாத பல்வேறு படங்களிலும் கமிட் ஆகி   விறுவிறுப்பாக நடித்து வந்தார். அப்பொழுது தான் சமந்தாவுக்கு பிரச்சனையை ஆரம்பித்தது.

திடீரென ஒரு அரிய வகை நோயை அவரை தாக்க மருத்துவமனையில் தங்கி இருந்தார் இதனால் அவரது உடல் மற்றும் அழகு போன்றவை குறைய தொடங்கியது. சிறு இடைவெளிக்கு  நோயிலிருந்து குணமாகி கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஏற்றி கோயில் குளம் என சுற்றி வந்த புகைப்படங்கள் பெரிதாக வெளியாகின.

இப்படி இருந்தாலும் சினிமா உலகில் ஜொலிக்க உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். அண்மையில் நடிகை சமந்தா ஜிம் ஓர்க் அவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

மேலும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உடம்பை பிட்டாக வைத்திருக்கும் நடிகைகளில் முதன்மையானவராக நீங்கள் தான் இருக்கிறீர்கள் எனக்கூறிய கமெண்ட் அடித்து வந்தனர். இந்த நிலையில் சமந்தாவுக்கு இணையாக முன்னணி நடிகை தமன்னாவும் ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

அண்மையில் கூட நடிகை தமன்னா டைட்டான ட்ரெஸ்ஸில் தீவிரமாக ஜிம் ஒர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டார் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய work out எங்களை அதிரவைக்கிறது என கூறி லைக்குகளை அள்ளி வீசி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை தமன்னா ஜிம் ஒர்க் அவுட்டில் அசத்தும் அந்த வீடியோவை  நீங்களே பாருங்கள்.