மிக மிக எளிமையாக மக்களுடன் மக்களாக நடந்து செல்லும் தல அஜித்.! வைரலாகும் வீடியோ காணொளி.!

0

தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் என்றால் அது தல அஜித்தை தான் கூற வேண்டும் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் புரொடக்ஷன் பணி மட்டும் இன்னும் நடைபெற்று வருகிறது.

சமிபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற தல அஜித் அங்கு முக கவசம் அணியாத ரசிகரின் செல்போனை பிடுங்கி பின்பு அறிவுரை சொல்லி அவரிடம் போனை கொடுத்தார் அப்பொழுது ஏன் அஜித் ஆத்திரமடைந்து ரசிகரின் போனை பிடுங்கினார் என பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.

இதனையடுத்து தல அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் கொடுக்கும் விதமாக போனி கபூர் சமூக வலைதள பக்கங்களில் தல அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டையும் வெளியிடுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தல அஜித் ரசிகர்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாள் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் இதனையடுத்து தல அஜித் மக்களோடு மக்களாக பஸ் ஸ்டாண்டில் நடந்து செல்கிறார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் எளிமையானவர் என்பதை காட்டுவதற்கு இந்த வீடியோ போதும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.