நடிகர் ராம்கி பற்றிய உண்மைகளை எடுத்து சொன்ன.! முன்னணி பிரபலம்.!

0

ஒரு காலகட்டத்தில் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் ராம்கி ஆவார். இவர் சின்ன பூவே மெல்ல பேசு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து செந்தூரப் பூவே, இணைந்த கைகள், வனஜா கிரிஜா, மாயா பஜார் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்தநிலையில் 1995ஆம் ஆண்டில் பிரபல நடிகையான நிரோஷாவை திருமணம் செய்து கொண்டார். நிரோஷா மற்றும் ராம்கி இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் ராம்கி திரைவாழ்க்கையில் இருந்து சற்று பிரேக்கெடுக்கும் வகையில் ஆறு வருடங்கள் நடிக்காமல் இருந்தார் அதன் பிறகு 2013ஆம் ஆண்டில் பிரபு இயக்கத்தில் திரையுலகிற்கு வெளிவந்த பிரியாணி திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான பெப்சி உமா ராம்கி நேரில் கண்டு பேட்டி ஒன்றை எடுத்தார் அப்பேட்டியில் ராம்கி எனக்கு சிறிய வயதிலிருந்தே ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளது எனவும் மற்றும் புதிய எலக்ட்ரானிக் பொருட்கள் கண்டுபிடித்தால் அதனை உடனே வாங்கி விடுவேன் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் விவேக்கும் ஒரு பேட்டியில் இவருக்கு ஜோதிடத்தின் மீதும் எலக்ட்ரானிக் துறையின் மீதும் அதிக ஆர்வம் உள்ளது என கூறி உள்ளார்.

இதனை அறிந்து கொண்ட பெப்சி உமா தற்போது இணையதளத்தில் இதனை பற்றிய செய்திகளை அறிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.