எதிர்நீச்சல் சீரியலில் தடபுடலாக தயாராகும் விருந்து.! வைரலாகும் ப்ரோமோ..

ethir neechal

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆதிரையின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதாவது அருண் ஆதிரைக்கு திருமணத்தை நடத்தி வைக்க ஜனனி முயற்சி செய்து வந்த நிலையில் அதே நேரத்தில் குணசேகரன் ஆதிரை கரிகாலனுக்கு திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தார்.

எனவே ஆதிரைக்கு யாருடன் தான் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆதிரை இருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்டு குணசேகரன் தனது குடும்பத்தினருடன் வந்து நடுரோட்டில் அதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதன் பிறகு ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கும் சென்று திருமணத்தையும் ரிஜிஸ்டர் செய்திருக்கும் நிலையில் ஆதிரையை ஜான்சி ராணி கரிகாலன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள்.

ஞானத்திற்கு ஆதிரையை இந்த வீட்டில் விடுவது சுத்தமாக பிடிக்கவில்லை எனவே குணசேகரனிடம் ஏதோ பண்ணுங்க என கூறிவிடுகிறார் பிறகு இவர்கள் ஆதிரையை இதுதான் உன்னுடைய புகுந்த வீடு எங்கு தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டு வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் ஜனனிடம் நீ இதுல தோத்துட்ட என சொல்ல இல்லை நீங்கதான் தோத்துட்டீங்க என கூறுகிறார்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கதிர் ஜனனியை அடிக்க செல்ல சக்தி கதிரை பளார் என அறைந்து விடுகிறார் என்னுடைய பொண்டாட்டி மேல யாராச்சும் கைய வச்சிங்கனா நான் அடிப்பேன் என பேச குணசேகரன் கதிர் என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இவ்வாறு இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் அனைவரையும் எம்மா ஏய் சைவம் சைவம் ரெண்டுத்துலையும் எத்தனை வகை இருக்கோ அத்தனை வகையையும் சமச்சிடு என சொல்ல அதற்கு நந்தினி என்ன மாமா யாராச்சும் விஐபி வராங்களா என கேட்கிறார்.

கரிகாலன் மாப்பிள்ளை விருந்துக்கு வராமா இத்தனை நாளா அவ வேற யாரோ ஒருத்தன் இப்ப இந்த வீட்டு மாப்பிள்ளை என சொல்ல குணசேகரன் மனைவி நான் சைவ சாப்பாடை பார்த்திருப்பதாக கூற ரேணுகா நான் அசைவத்தை பார்த்துகிறேன் என்று சொல்கிறார். பிறகு நந்தி இரண்டையும் நான் பார்த்துகிறேன் என சொல்ல ஜனனி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஸ்பெஷஸலாக மாப்பிள்ளை விருந்து ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஜனனியை அடிக்க வந்த கதிர்.! ஓங்கி பளார் என அரைந்த சக்தி.. நடுநடுங்கி நிற்கும் குணசேகரன்…

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைவருடைய எதிர்பார்ப்பும் தற்பொழுது தோல்வியில் முடிந்திருப்பது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜனனி எப்படியாவது ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில் அதே நேரத்தில் குணசேகரன் ஆதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி வைக்க அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் வரும் வழியில் அருணுக்கு விபத்து நடைபெற்றதால் ஆதிரையின் திருமணம் அருணுடன் நடக்க முடியாமல் போனது இவர்கள் இருக்கும் கோவிலை தெரிந்துக் கொண்ட குணசேகரன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்த நிலையில் நடு ரோட்டில் ஆதிரை கரிகாலனின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்த பிறகு ஆதிரையை அழைத்துச் செல்ல ஆதிரை தனது தலியை கழட்டி வெளியே வீசியதால் இது சரிப்பட்டு வராது என்பதற்காக ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு சென்று திருமணத்தை ரிஜிஸ்டர் செய்துவிட்டார்கள் இப்படிப்பட்ட நிலையில் ஆதிரையை கரிகாலன் வீட்டிற்கு குணசேகரன் அழைத்து சென்று இதுதான் இனிமேல் உன்னுடைய புகுந்த வீடு இங்கு தான் இருக்க வேண்டும் என சொல்ல ஆதிரை இங்கு என்னால் எப்படி வாழ முடியும் என அழுகிறார்.

இவ்வாறு ஆதிரையின் வாழ்க்கை நாசமாய் போயிருக்கும் நிலையில் ஜனனி அருணை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு செல்கிறார் அருணின் அம்மா என்ன பண்ணி வச்சிருக்க என கேட்க நீங்க ஆரம்பித்ததை நான் முடிச்சு வைக்கணும்னு நினைச்ச என சொல்ல அது எங்க வந்து நிப்பாட்டி இருக்கு பாரு என அருண்னின் அப்பா கூறுகிறார்.

இதனை அடுத்து தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் தான் ஜெயித்து விட்டதாக கூறி ஜனனியை மன்னிப்பு கேட்க சொல்கிறார் நீங்க தோத்துட்டீங்க என ஜனனி பேச அந்த நேரத்தில் கதிர் ஜனனியை அடிக்க கை ஓங்குகிறார் சக்தி உடனே பளார் என கதிரையை அடித்து விட்டு என் பொண்டாட்டி யாராவது அடிச்சா அடிப்பேன் என பேச மற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் வில்லத்தனத்தை பார்த்திருப்பீங்க.. ரொமான்ஸ்சை பார்த்தது இல்லையே.! வைரல் வீடியோ

ethir neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு வீட்டின் அடிமைகளாக நடத்தி வரும் ஆண்களையும், ஆண்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.

எனவே இந்த சீரியலை பார்த்து விட்டு தனது மனைவி தன்னை ஆதி குணசேகரன் ஆகவும் அவளை ஜனனியாகவும் நினைத்துக் கொண்டு சண்டை போடுவதாக ஆண்கள் கூறி வருகிறார்களாம். எனவே இந்த சீரியலை விரைவில் நிறுத்த வேண்டும் என கூறிவரும் நிலையில் ஆனால் அதே நேரத்தில் பெண்களின் ஆதரவுடன் டிஆர்பி யில் முன்னணியும் வகித்து வருகிறது.

இவ்வாறு இந்த சீரியல் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு ஆதரவை பெற்றதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரன் மற்றும் ஜனனி கேரக்டர் தான். ஆதி குணசேகரன் வில்லனாக அனைத்து பெண்களையும் அடைக்கி வரும் நிலையில் ஜனனி ஆதி குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டு போராடி வருகிறார் எனவே இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆதி குணசேகரன் ஆரம்பத்தில் சாருபாலா மீது காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் அவர் படிக்காதவன் என்பதனால் சாருபாலா திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் எனவே தான் குணசேகரன் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு தனது வீட்டில் அடிமைகளாக நடத்தி வருகிறார்.

இவ்வாறு ஒரு எபிசோடில் சாருபாலா மற்றும் ஆதி குணசேகரன் இருவரும் சந்தித்து பேசி இருப்பார்கள் அதிலிருந்து எடிட் செய்து ஆதி குணசேகரன் ரொமான்ஸ் செய்வது போல் ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி இருக்கும் நிலையில் அதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இதனை பார்த்த ரசிகர்கள் ஆதி குணசேகரனின் வில்லத்தனத்தை மட்டும் தான் பார்த்திருப்பீர்கள் ரொமான்ஸ்சை பார்த்ததில்யே என கேலியாக கூறி வருகிறார்கள்.

அருணுக்கு என்ன ஆனது? பார்க்க சென்ற ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆதிரையின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரச்சனைகளுக்கும் நடுவே ஜனனி அதிரையை கோவிலுக்கு அழைத்து செற்று நிலையில் அருண் வரவில்லை.

கௌதமிடம் கேட்கும் பொழுது அருண் காணாமல் போனது பெரிய வருகிறது எனவே கௌதம் தொடர்ந்து அருணை தேடி வரும் நிலையில் அருணுக்கு என்ன ஆனது என்பதை காட்டாமல் இருந்தார்கள். எனவே குணசேகரன் நடுரோட்டில் வைத்து கரிகாலன் ஆதிரையின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ஆதிரை காரில் போய்க்கொண்டிருக்கும் போது கரிகாலன் கட்டியிருந்த தாலியை கழட்டி வெளியில் வீசிவிட்டு தாலி கட்டுனால் மட்டும் அவன் என் புருஷன் ஆயிட முடியுமா என கூறிய நிலையில் இதனால் குணசேகரன் ஆதிரை கரிகாலனின் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்ய முடிவெடுத்து ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்கிறார்கள்.

அங்கு ஆதிரையை கையெழுத்து போடுமாறு கூற அப்பொழுது நான் ஞானம் அண்ணனிடம் தனியாக பேச வேண்டும் என கேட்கிறார் பிறகு குணசேகரனும் சரி என சொல்லிவிட்டு பேச சொல்ல அப்பொழுது நான் அருணிடம் ஒருமுறை பேச வேண்டும் எனக் கேட்க ஞானம் அதெல்லாம் முடியாது என கூறுகிறார்.

குணசேகரன் நானே அவனுக்கு போன் பண்ணி தரேன் என போன் பண்ண வீட்டில் இருப்பவர்கள் எடுத்து இனிமேல் அவனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிரையும் கையெழுத்து போடுகிறார்.

இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அருண் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜனனி அங்கு சென்று பார்க்கிறார் அப்பொழுது அருணின் அம்மா என்ன இது என கேட்க நீங்க ஆரம்பிச்சதை முடிச்சு வைக்கலாம்னு நினைச்ச மேம் என சொல்ல இப்ப எங்க வந்து நிக்குது பாரு என அருணின் அப்பா கூறுகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

அஜித்தால் தான் என்னுடைய வாழ்க்கையே போச்சு.. புலம்பும் எதிர்நீச்சல் பிரபலம்

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் தான் தற்பொழுது ஒட்டுமொத்த சீரியல்களையும் ஓவர் …

Read more

வலுக்கட்டாயமாக நடைபெற்று முடிந்த ஆதிரை-கரிகாலன் திருமணம்.! கதறும் ஜனனி டீம்.. எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட்

ethir-neechal-

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்த பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது ஆதிரையின் திருமணத்தை …

Read more

காணாமல் போன அருண்.. ஆதிரை, ஜனனி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த குணசேகரன்.! எதிர்நீச்சல் சீரியல் இன்றைய ப்ரோமோ

ethir--neechal

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அது யாருடன் என்ற கேள்வி …

Read more

அருண் வராததால் பதட்டத்தில் ஆதிரை.! சாகத் துணிந்த குணசேகரன்.. எரிற தீயில் எண்ணையை ஊற்றும் ஜான்சி ராணி

ethir neechal 4

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அதிரை தனது …

Read more

ஒரு வழியாக தப்பித்து ஓடிய அதிரை.! விசாலாட்சியை மிரட்டும் ஜான்சிராணி.. எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ

ethirneechal

எதிர்நீச்சல் சீரியல் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது ஆதிரையின் திருமணத்தை வைத்து மிகவும் விறுவிறுப்பாக எபிசோடுகள் ஒளிபரப்பாகி …

Read more

எதிர்நீச்சல் சீரியல் ஆதிரைக்கு திருமணம் ஆயிடுச்சா.? கணவர் யார் தெரியுமா? புகைப்படம் இதோ..

ethir neechal

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் …

Read more

ஒருவழியாக கோவிலில் இருந்து தப்பித்த ஆதிரை.! அருணுடன் திருமணம் நடைபெறுமா? ஜீவானந்தத்தின் பிளான் என்ன? எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட்

ethirneechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சுவாரஸ்யமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எப்படியாவது ஆதிரை …

Read more

குடித்துவிட்டு கலாட்டா செய்யும் ஜான்சி ராணி, கரிகாலன்.! குணசேகரனுக்கே தண்ணி காட்டும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட்

erthir neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஜீவானந்தம் …

Read more