தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருள்நிதி நடிப்பில் தற்போது ‘திருவின் குரல்’ என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வம்சம், மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் அருள்நிதி.
தற்பொழுது இவர் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் திருவின் குரல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் அருள் நிதியை தொடர்ந்து கதாநாயகியாக ஆத்மிகா நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலம் அடைந்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அருள்நிதி திருவின் குரல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு மேல் படக் குழுவினர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாறு ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அதிரடியான காட்சிகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.