srinath

கெத்தாக இருக்கும் என புல்லட் ஓட்டி அசிங்கப்பட்ட அஜித் பட நடிகை.! வடிவேலுவின் புல்லட் பாண்டி மீம்ஸ் போட்டு மரணமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய இவன் தந்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

காற்று வெளியிடை திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் 2019ஆம் ஆண்டு தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படம் இவருக்கு அடுத்த பட வாய்ப்பை பெற்று கொடுத்தது.

தற்பொழுது ஷரத்தா ஸ்ரீநாத், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் ஷுரத்தா ஸ்ரீநாத் அவர்களுக்கு பைக் ஓட்டத் தெரியாமல் கீழே விழுந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது கடந்த 2014ஆம் ஆண்டு நந்தி ஹீல்ஸில் நடைபெற்ற ஷூட்டிங்கில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டுள்ளார் அதற்கு தெரியாது எனக் கூறினேன். அதனால் பைக் எப்படி ஓட்டுவது என்று பயிற்சி எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

https://twitter.com/Shraddha_Offi/status/1366596989274628096?s=20

அதன் பின்னர் நான் பைக்கை ஓட்டி செல்லும்பொழுது எப்படி விழுந்தேன் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இந்திய சினிமாவில் மிகவும் போல்டான கதாபாத்திரம் என்றால் பைக் ஓட்ட தெரிவது மிகவும் அவசியம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் புல்லட்டில் இருந்து கீழே விழும் பொழுது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை எனவும் கீழே விழுந்தவுடன் புல்லட் இருக்கு எந்த சேதாரமும் இல்லையா என்பதை தான் அனைவரும் பார்த்தார்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்வளவு வெயிட்டாக இருக்கிறது எனவும் கேள்வி கேட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இதற்கு ரசிகர்கள் வடிவேல் மீம்ஸ் கிரியேட் செய்து புல்லட் பாண்டி என கலாய்த்து வருகிறார்கள்.

ajith

அஜித்துடன் நடித்தால் அஜித் போல் பைக் ஒட்ட முடியுமா.! கீழே விழுந்து பல்ப் வாங்கிய நடிகையின் வீடியோ.

தென்னிந்திய சினிமா உலகில் தற்போது பிரபலமடைந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினைப் பெற்றார்.

அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படத்திலும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த காற்று வெளியிடை படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே வளரத் தொடங்கினார். மேலும் பிரபலம் அடையும் வகையில் சமூக அக்கறை உள்ள படமான நேர்கொண்டபார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து மேலும் பிரபலமடைந்தார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

அஜித் உடன் இணைந்து நடித்த தான் காரணமாக  அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் அதன் விளைவாக தற்போது அவர் கன்னடம் ,தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார்.இந்த நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்ட தெரியாமல் கீழே விழுந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது கடந்த 2017 ஆம் ஆண்டு நந்தி ஹில்ஸில் நடைபெற்ற ஷூட்டிங்கில் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டனர்.

அதற்கு நான் தெரியாது என்று கூறினேன் அதற்கு அவர்கள் கற்றுக் கொடுத்தனர் அதன்பின் நான் பைக் ஓட்டும்  பொழுது கீழே விழுந்தேன் அப்பொழுது சுற்றியிருந்தவர்கள் என்னை கவனிக்காமல் பைக்கு ஏதாவது டேமேஜ் ஆகி உள்ளதாக பார்த்தனர். ராயல் என்ஃபீல்ட் இவ்வளவு வைட்டா இருக்கும்னு எனக்கே தெரியாது பதிவிட்டார். இதைப்பார்த்த கோமாளி நடிகை சம்யுக்தா சூப்பர் என கமெண்ட் அடித்துயுள்ளார்.