மற்ற மொழி திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் ஹிந்தி சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சமீரா ஷெட்டி.
தமிழில் இது தான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் உள்ளது இந்நிலையில் தற்போது இவர் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால் தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் வேகமாக பரவி வருகிறது பலர் உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீரா ஷெட்டிக்கும் சமீபத்தில் கொரோனா தோற்று உறுதியானது தற்போது தான் அந்தத் இவற்றில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் சமீரா ஷெட்டி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு அதற்கு தேவையான எதிர்ப்பு சக்திக்காக என்னென்ன அவற்றை சாப்பிட வேண்டும் என்பதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இவருக்கு நன்றி கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.