iravi-nizhal

பிரேக்கப் ஆனவுடன் அழுகாமல் ஆட்டம் போட்டு கொண்டாடிய இரவின் நிழல் பட நடிகை.! காட்டுத் தீ போல் பரவும் வீடியோ

பிரபல நடிகை சாய் பிரியங்கா ரூத் பிரேக்கப் ஆனதை டான்ஸ் ஆடி கொண்டாடி இருக்கும் நிலையில் அது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களாக பிரேக்கப் ஆனால் அதனை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். முன்பெல்லாம் ஒருவருடன் உறவில் இருக்கும் பொழுது ஏதோ சில பிரச்சனைகளால் பிரிந்து விட்டால் இருவருக்கும் வலிக்கும் ஆனால் அதனை தற்பொழுது கொண்டாடி வருவது வியந்து பார்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக டைவர்ஸ் போட்டோ ஷூட் நடத்தி பரபரப்பை கிளப்பியவர் தான் நடிகை ஷாலினி. இந்நிலையின் பிரபல நடிகை ப்ரேக்கப் ஆனதை கொண்டாடி இருக்கும் நிலையில் அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சாய் பிரியங்கா ரூத்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை அறிமுகமான நிலையில் இதனை அடுத்து பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம் உள்ளிட்ட சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் சீரியல்கள் மட்டுமல்லாமல் டான்ஸ் ஜோடி டான்ஸ், கா கா கா போ போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கும் நிலையில் இதில் கிராமத்து பெண் போலவே பங்கேற்று இருப்பார்.

பிறகு இவருக்கு இரவின் நிழல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பிரபலமானார். அதாவது பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மறுபுறம் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சாய் பரியங்கா ரூத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு பிரேக்கப் ஆனதை செம ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளார். டாக்ஷிக் ரிலேஷன்ஷிப்பை விட்டு வெளியே வந்த பிறகு என்று குறிப்பிட்டு அவர் பகிர்ந்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படும் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..